உனது ரப்பு யார்? என உன்னிடம் கேட்டால் நீர் கூறும்.

 


முதலாவது அம்சம் : ‘ரப்பு’ பற்றிய அறிவு


உனது ரப்பு யார்? என உன்னிடம் கேட்டால் நீர் கூறும்.


என்னையும் உலகில் உள்ள அனைத்தையும் அவன் அருளால் படைத்துப் பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்து கின்றான். அவனையே நான் அடிபணிந்து வணங்குகின்றேன். அவனையன்றி அடிபணிந்து வணங்க யாருமில்லை.


இதற்கு ஆதாரமாக அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது;


"எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்."


(அல்குர்ஆன் 1 : 1)


அல்லாஹ்வைத் தவிர ஏனைய அனைத்தும் உலகமாகும். நானும் அவ்வுலகின் ஓரங்கமாகும்.


உனது 'ரப்பை' நீர் எவ்வாறு அறிந்து கொண்டாய்? என உன்னிடம் வினவப்பட்டால் நீர் கூறு;


நான் எனது 'ரப்பை' அவனது அத்தாட்சிகள், படைப்புகள் இரவு, பகல், சூரியன், சந்திரன் என்பவற்றில் காணப்படும் அத்தாட்சிகள்; வானம், பூமி என்பவற்றில் காணப்படும் இறைவனது படைப்புகள் என்பவற்றின் மூலம் அறிந்து கொண்டேன்.


அல்லாஹ் எதற்காக உன்னைப் படைத்தான்? என உன்னிடம் வினவப்பட்டால் நீர் கூறும்;


அவனை வணங்குவதற்காகவே என்னைப் படைத்தான்.


இதற்கு ஆதாரமாக அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:


"ஜின் வர்க்கத்தையும், மனித இனத்தையும் நான் என்னை வணங்குவதற்காகவே படைத்தேன்.”


(அல்குர்ஆன் 51:56)


அல்லாஹ் கட்டளையிட்ட மகத்தான விடயம் 'தவ்ஹீத்' எனும் ஏகத்துவக் கொள்கையாகும். வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஏகப்படுத்துவது என்பது இதன் கருத்து வெளிப்பாடாக அமைகிறது.


அல்லாஹ் தடுத்து நிறுத்திய பாரிய செயல் 'சிர்க்' எனும் இணைவைத்தலாகும். அல்லாஹ்வுக்கு இணையாக ஏனையவற்றிடம் பிரார்த்தனை செய்வது என்பது இதன் கருத்து வெளிப்பாடாக அமைகிறது.


இதற்கு ஆதாரமாக அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:


"மேலும் நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணைவைக்காதீர்கள்."


(அல்குர் ஆன் )4:36)


அல்லாஹ் எதனை முதலில் உன்மீது கடமை யாக்கியது? என உன்னிடம் வினவப்பட்டால் நீர் கூறும்:


'தாகத்தை' நிராகரித்து அல்லாஹ்வை கொள்ள வேண்டும் என்பதாகும்.


(தாகூத் என்பது தனக்கு விதிக்கப்பட்ட ஆகுமான வரம்புகளை மீறி நடத்தல் எனப் பொருள்படும்.)


இதற்கு ஆதாரமாக அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:


"இனி எவர் தாகூத்தை நிராகரித்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் திட்டமாக மிகப்பலமான பிடி மானத்தைப் பற்றிக் கொண்ட வராவார்."


இவ் இறைவசனத்தில் வரும் அல் உர்வதுல் வுஸ்கா மிகப் பலமான பிடி மானம் என்பது லா  இலாஹ இல்லல்லாஹு எனும் திருக்கலிமா என்று கூறப்படு கிறது. இதன் கருத்து: அல்லாஹ்வைத் தவிர வணங்குவதற்குரியவன் யாருமில்லைஎன்பதாகும்.


Comments