உலக வாழ்வும், தவ்ஹீத் (ஏகத்துவம்) பற்றிய அறிவும்
தவ்ஹீத்பற்றிய தெளிவான அறிவைப் பெறாது, அல்லாஹ்வின் கட்டளைகளை நிராகரித்து வாழ்வோரது வாழ்க்கை எத்தகையது என்பதை அல்லாஹ், பின்வரும் குர்ஆன வசனங்கள்மூலம் தெளிவு படுத்துகின்றான்.
"எவர்கள் நிராகரிக்கின் றார்களோ, அவர்கள் மிருகங்கள் உண் பதைப்போல் உண்டுகொண்டும், (மிருகங்களைப்போல்) சுகத்தை அனுபவித்துக்கொண்டும் இருக்கிறார்கள். (எனினும்) அவர்கள் (இறுதியாகத்) தங்குமிடம் நரகந்தான். அல்குர்ஆன் 47:12.
இவ்வசனத்தின்மூலம் தவ்ஹீத் பற்றிய விளக்கமின்றி நிராகரிப் போரும், மிருகங்களும் சமமாகவே கருதப்படுகின்றனர் என்பது புல னாகின்றது. ஆயினும் அல்குர்ஆனில் இன்னுமோர் இடத்தில், உண் மையை அறிந்து, குறுகிய உலக நோக்கங்களுக்காக, தமது மனோ இச்சைகளைப் பின்பற்றி வாழ்வோரை, மிருகங்களையும் விட இழி வானவர்கள் என அல்குர்ஆன் பின்வருமாறு வர்ணிக்கின்றது.
"நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் அநேகரை நாம் நரகத்திற்காகவே படைத்திருக்கின்றோம். (அவர்கள் எத்தகையோ ரெனில்) அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. எனினும் அவற் றைக் கொண்டு (இவ்வுலக அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்கமாட் டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு. எனினும் அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்கமாட்டார் கள். இத்தகையோர் மிருகங்களைப் போன்றவர்கள் - அவ்வாறல்ல, அவற்றைவிட அதிகமாக வழிகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையோர் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்க ளாவர்.' அல்குர்ஆன் 7:179.
எனவே, உண்மையான தவ்ஹீத் பற்றிய அறிவைப் பெற்று வாழ்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமாகும். அதனைப் பெற் றுக்கொள்ளக்கூடிய ஒரேவழி அல்லாஹ்வுடைய வேதங்கள் மூலமும், அவனது தூதர்களின் வாக்குகள் மூலமும் அந்த அறிவைப் பெறுதல் ஆகும். இன்று எம் மத்தியில் சரியான தவ்ஹீதை எடுத்தியம்பிக் கொண்டிருப்பன அவ்குர்ஆனும், அல்ஹதீஸும் ஆகும். ஆயினும், அவற்றில் இருந்தும், சரிவா தவ்ஹீதினை விளங்கிக்கொள்வதில் இருந்தும், மக்களைத் தடுக்கும் சில வழிதவறிய மனிதர்கள் உலகின் கண் தோன்றி, உண்மையை விளங்குவகில் இருந்து மக்களைத் தடுப்ப தற்கு முயற்சித்தவண்ணமே இருந்துவருகின்றனர். அவர்கள் தங்க ளது வாதங்களுக்கு ஆதாரமாக அல்குர்ஆன் வசனங்களுக்கும், ஹகீஸ் களுக்கும் தமது நோக்கங்களை அடையும் வகையில் தவறான விளக் கங்களைக் கற்பிப்பதற்குத் தயங்கமாட்டார்கள். தமது கொள்கையை நியாயப்படுத்தப் பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களாயிருப் பினும் அவற்றைச் சரியென எடுத்தாள்வர். தாம் சரியான வழியில் தான் இருக்கிறோம் என்பதைத் தமது வாதங்கள்மூலம் மக்களுக்குக் காட்டி, மக்கள் மத்தியில் செல்லாக்கைப் பெறவும், மக்களைத் தம் பால் ஈர்க்கவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வகையில் உலகில் மக்களை வழிகெடுப்பதோடு அல்குர் ஆனுக்கும் தம் மனோ இச்சைக்கு ஏற்றவாறு விளக்கமளிப்போரைப் பற்றி றசூல் (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். றசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (றளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். "எவர் அல்குர்ஆனுக்கு தமது அபிப்பிராயப்படி விளக்கமளிக்கின்றாரோ, அவர் நரகில் தனக்குரிய இடத்தை அமைத்துக்கொள்ளட்டும்."
ஆதாரம் - திர்மிதீ.
அல்குர்ஆனுக்கு யாரும் தம் இஷ்டப்படி விளக்கம் அளிக்க முடியாது. அவ்வாறு விளக்கம் அளிப்பது மாபெரிய குற்றமாகும். அல்குர் ஆனை விளங்க விரும்புவோர், தங்களது மனதில் ஆழமாகப் பதிந்துள்ள தவறான கருத்துக்களை வைத்தோ, அல்லது உலக சுகபோகங்களை அடைவதற்காகக் குறுகிய நோக்கங்களை அடிப் படையாகக்கொண்டு, அளிக்கப்பட்ட விளக்கங்களை வைத்தோ, அல்குர்ஆனை விளங்க முயற்சிக்கக்கூடாது. மாறாக, அல்குர் ஆனில் உள்ள சில வசனங்களுக்கு வேறு சில வசனங்கள் வழங்கும் தெளி வான விளக்கத்தை வைத்து, அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் கள் வழங்கும் விளக்கத்தைக் கொண்டு அல்லது அல்குர்ஆனுக்கு ஸஹாபாக்கள் வழங்கிய விளக்கங்களை வைத்து அல்குர் ஆனை விளங்க முயலுதல்வேண்டும். இந்த வழியிலேயே சங்கைக்குரிய இமாம் கள் அல்குர் ஆனை விளங்கினார்கள், அதற்கு விளக்கமும் அளித்தார் கள்.
இவ்வாறாக சுயலாபத்துக்காக மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்வோரின் உண்மை நிலையினை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றான். அவற்றில் சிலவற்றை இங்கு நோக்குவோம். முற்காலத்தில் நஸாறாக்களிடையே காணப்பட்ட இத்தகையோரை அல்லாஹ் இவ்வாறு வர்ணிக்கின்றான்.
"விசுவாசிகளே! நிச்சயமாக (அவர்களுடைய) மதகுருமார்களி லும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் பொருள்களைத் தப்பான முறையில் விழுங்கிவிடுவதுடன், (மக்கள்) அல்லாஹ்வுடைய பாதை யில் செல்வதனையும் தடை செய்கின்றனர்." அல்குர்ஆன் 9:34.
இன்னுமோர் இடத்தில்,
"அவர்களை நோக்சி, "நீங்கள் பூமியில் விஷமம் செய்(து கொண்டு அலை)யாதீர்கள்" என்று கூறப்பெற்றால், (அதற்கு) அவர் கள், "நாங்கள் நல்லதைச் செய்வோர்தாம்! (விஷமிகளல்ல)" எனக் கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் விஷமிகளேயன்றோ? ஆனால், (தாங்கள் தாம் மூடர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ளமாட் டார்கள்.' அல்குர்ஆன் - 2: 11-
"நியாயமின்றி, பூமியில் கர்வங்கொண்டலைபவர்கள், என் னுடைய கட்டளைகளைப் புறக்கணிக்கும்படி செய்துவிடுவேன். ஆகவே அவர்கள் அத்தாட்சிகள் யாவையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவர்கள் அதனை(த் தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள. எனினும் தவறான வழியைக் கண் டாலோ, அதனையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள் வார்கள். நிச்சயமாக, அவர்கள், நம்முடைய வசனங்களைப் பொய் யாக்கி, அவைகளை புறக்கணித்துப் பாராமுகமாயிருந்ததே இதற் குரிய காரணமாகும்." அல்குர்ஆன் 7: 116.
உலகில், இத்தகைய தவறான வழியில் செல்லும் தலைவர் களையும், பெரியோர்களையும் பின்பற்றி நடந்து, மறுமையில் அல்லா ஹ்வின் தண்டனைக்குள்ளாவோர், தாம அடையும் வேதனை யினைத் தாங்கமுடியா தவர்களாக அல்லாஹ்வை நோக்கிப் பின்வரு மாறு கூறுவார்கள்.
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர் களுக்கும், எங்கள பெரியோர்களுக்குமே வழிப்பட்டோம். அவர்கள் எங்களைத் தப்பான வழியில் செலுத்திவிட்டார்கள. (ஆகவே) எங் கள் இறைவனே! நீ அவர்களுக்கு இருமடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்கள மீது மகத்தான சாபத்தை இடுவாயாக" என்று கூறுவார் சுள்." அல்குர்ஆன் 33: 67,68
மேலும், உலகில் மக்களைத் தவறான வழியில் நடாத்திக் கொண்டிருந்தோர், தாங்கள் எதற்கும் பொறுப்பாளிகள் அல்ல எனக் கூறி, மறுமையில் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவே முயற்சிப்பர். இதனை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
"பலஹீனமானவர்கள் கர்வங்கொண்டவர்களை நோக்கி, "நீங் கள் இல்லாவிடில், நிச்சயமாக நாங்கள் விசுவாசங்கொண்டேயிருப் போம்'' எனக் கூதுவர். அதற்கு (அவர்களில்) கர்வங் கொண்டிருந்தவர்கள், பலஹீனமாக இருந்தவர்களை நோக்சி, "உங்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர், (நீங்கள் அதில் செல்லாது) நாங்களா உங் களை, அதை விட்டுத் தடுத்துக்கொண்டோம்? (அவ்வாறு) இல்லை, நீங்கள் தாம் (அதில் செல்லாது) குற்றவாளிகளானீர்சுள்" என்று கூறுவார்கள்." அல்குர்ஆன் 34: 31.32
இவ்வாறாக, மக்களை வழிகெடுக்கும், உண்மைக்கு மாறான பல கருத்துக்கள் தோன்றி மறைந்துள்ளமையினை இஸ்லாமிய உலக வரலாற்றில் அதிகமாகக் காணலாம். உதாரணமாக காதியானிகள், அத்வைதிகள், முஜஸ்ஸிமாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்றோரைக் குறிப்பிடலாம். இன்றுகூட எம் மத்தியில், தவ்ஹீத் சம்பந்தமாக பல் வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இவ்வேளையில், ஒவ் வொரு முஸ்லிமும், அல்லாஹ்வின் கோபத்தில் இருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ள, சரியான தல்ஹீத் யாது என்பது பற்றித் தெளி வாக அறிந்து, தனது ஈமானை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகும். இதனைக் கவனத்திற் கொண்டே இப்பிரசுரம் வெளி யிடப்படுகின்றது. எனவே, இஸ்லாத்தில் தவ்ஹீத் பற்றிய சில அடிப் படைகளை இதன்கீழ் நோக்குவோம்.
Comments
Post a Comment