தவ்ஹீத் என்றால் என்ன?

 


தவ்ஹீத் என்றால் என்ன?


"தவ்ஹீத்" எனும் சொல் 'வஹ்ஹத' என்ற அறபுச் சொல் லின் அடியாகப் பிறந்ததாகும். 'ஒருமைப்படுத்தல்' எனும் பொரு ளைக் குறிக்கும் இச்சொல் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கே பயன்படுத்தப்படும். அதாவது, அல்லாஹ் ஒருவன், அவனது பண்பு களிலோ, செயல்களிலோ அவனுக்கு யாரும் இணையாக மாட்டார் கள். வணக்கமும் அவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இக் கருத்தினையே சூறத்துல் இஹ்லாஸ் குறிப்பிடுகின்றது.


"(நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறும்: அல்லாஹ் ஒரூ வன் தான். (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) அவன் (எவரை யும்) பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே அவனுக்குத் தகப்பனுமில்லை) தவிர, அவனுக்கு ஒப்பாகவும் ஒன்று மில்லை. அல் குர் ஆன் -112


அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து, போஷீப்பவனான அல்லாஹ்


அல்லாஹ் அனைத்தையும் படைப்பதில், பரிபாலிப்பதில் தனித் தவன். அவ்வாறே அண்டசராசரங்கள் அனைத்திலுமுள்ள படைப் பினங்கள் யாவற்றினதும் பரிபாலகன் அல்லாஹ்வே ஆவான். படைத்தல், பரிபாலித்தல், போஷித்தல், ஆட்சி செய்தல், உயிர்ப்பித்தல், மரணிக்கச் செய்தல், அருட்கொடைகளை வழங்கல், சிலதை சிலருக்கு வழங்காதுவிடல், கண்ணியப்படுத்தல், சிறுமைப்படுத்தல் இவை யாவும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தமானவை ஆகும்.


"எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்குரியதே. அவனே வானங்களை யும், பூமியையும் படைத்தவன். இருள்களையும், பிரகாசத்தையும் உண்டாக்கியவனும் அவனே.'' அல்குர்ஆன் 6:1


"(நபியே!) நீர் கூறுவீராக. "எங்கள் அல்லாஹ்வே! சகல அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும் பியவர்களைக் கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவு படுத்துகின்றாய். நன்மைகள் யாவும் உன்கையில் தான் இருக்கின்றன. நிச்சயமாக நீயே யாவற்றின் மீதும் பேராற்றலுடையோன்."


அல்குர்ஆன் 3: 26


படைப்பாளனும், பரிபாலிப்பவனுமான அல்லாஹ், தனது படைப்புகளுள் பிரமாண்டமான, அண்டவெளியில் நிகழும் சில தோற் றப்பாடுகளைக் குறிப்பிட்டு, அவற்றின் மூலம் தனது வல்லமையினை யும், படைப்பின் நுட்பத்தினையும் எடுத்துக்காட்டுவதனைப் பின்வரும் ஆயத்துகளில் காணலாம்.


"இரவும், இவர்களுக்கோர் அத்தாட்சியாகும். அதிலிருந்தே நாம் பகலை வெளிப்படுத்துகின்றோம். இன்றேல், இவர்கள் இருளில் மூழ்கிவிடுவார்கள். தன்னுடைய வரையறைக்குள் (தவறாமல்) செல் லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது (யாவையும்) நன்கறிந் தோனும் மிகைத்தோனுமான (அல்லாஹ்)வினால் விதிக்கப்பட்ட தாகும். (உலர்ந்து வரைந்த) பழைய பேரீச்சங் கம்பைப் போல் (பிறையாக) ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற் படுத்தியிருக்கின்றோம். சூரியன். சந்திரனை அணுகமுடியாது. இரவு, பகலை முந்த முடியாது. (இவ்வாறே கிரகங்களும், நட்சத்திரங்களும்) ஒவ்வொன்றும் (தன்னுடைய) வட்டவரைக்கு நீந்திச் செல்கின்றது." அல்குர்ஆன் 36: 37-40


மனிதனது நாளாந்த வாழ்வில் அல்லாஹ் புரிந்துவரும் அருட் கொடைகளில் முக்கியமான சிலவற்றை பின்வரும் அல்குர்ஆன் வசனங் களில் விளக்குகின்றான்.


"நீங்கள் (பூமியில்) பயிரிடுபவைகளைக் கவனித்தீர்களா?அதனை நீங்கள் (முளைப்பித்துப்) பயிராக்குகின்றீர்களா? அல்லது நாம் தாம் பயிராக்குகிறோமா? நாம் விரும்பினால், அதனை (விளையாத) பதர் களாக்கிவிடுவோம். அந்நேரத்தில் நீங்கள் ஆச்சரியப்பட்டு, "நிச்சய மாக நாங்கள் நஷ்டமடைந்துவிட்டோம்". "அன்றி, எங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போயிற்று'' (என்றும் கூறிக்கொண்டிருப்பீர் ).


"நீங்கள் குடிக்கின்ற நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து நீங்கள் அதனைப் பொழிவிக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிவிக் கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக்கி விட்டிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?""


"நீங்கள் அடுப்பில் மூட்டுகின்ற நெருப்பையும் கவனித்தீர் களா? அதன் மரத்தை நீங்கள் உற்பத்தி செய்கின்றீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா?" அல்குர்ஆன் 56: 63-72


எனவே உலகத்தையும், அதிலுள்ளவற்றையும் பரிபாலிக்கும் உரிமை அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமானதாகும். மாறாக, உலகில் வாழுகின்ற அல்லது மரத்துவிட்ட எவராலும், யாருக் கும் உணவு வழங்கவோ, நன்மைகளை அளிக்கவோ, தீமைகளைத் தடுக்கவோ முடியாது. அவ்வாறு அல்லாஹ்வுக்கே உரிய பணிகளைச் செய்யும் ஆற்றல், அல்லாஹ் அல்லாத நபிமார்கள், வலிமார்கள். நல்லோர்கள். பெரியோர்களுக்கும் உண்டு என நம்புவது, அல்லாஹ் வுக்கு இணை வைப்பதாகவே அமையும். இவ்வாறான ஷீர்க்கினை விட்டும் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.


வணங்குதற்குரியவனான அல்லாஹ்


அல்லாஹ் மாத்திரமே வணங்குதற்கு உரியவன், மனிதனது உள்ளத்தால், உறுப்புக்களால் நிறைவேற்றப்படும் அனைத்து வழி பாடுகளையும், அல்லாஹ் ஒருவனுக்காக மேற்கொள்ளவேண்டுமே தவிர, வேறு எவருக்காகவும் நிறைவேற்றுதல் கூடாது. இதனையே ''லாஇலாஹ இல்லல்லாஹு" எனும் கலிமா குறிக்கின்றது. இதன் பொருள், உண்மையாக வணங்கப்படுபவன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்பதாகும். அல்லாஹ் மாத்திரமே வணக்கத் திற்குப் பாத்தியதை உடையவன். அவன் அல்லாதவை மிக நுண்ணிய அணு தொடக்கம் நட்சத்திர மண்டலங்கள் வரை யாவுமே அவனது படைப்புக்கள் ஆகும். அவற்றுள் எதுவுமே அவனுக்கு இணையாக்கப் படமுடியாது. அவ்வாறு செய்வது ஷீர்க் வைப்பதாக அமையும். இந்த கலிமா தையிபாவினையே, உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும், றசூல்மார்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். அல்குர் ஆனும் இதனைப் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.


''(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல் லாம். "நிச்சயமாக என்னைத் தவிர வேறு நாயனில்லை. எனவே என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ அறிவிக்காமல் இல்லை''. அல்குர்ஆன் 21: 25


.'நிச்சயமாக நாம், 'நூஹை' அவருடைய மக்களுக்கு (நம் தூதராக அனுப்பி வைத்தோம். அவர், (அவர்களை முடைய)

நோக்கி), ''என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங் கள். அவனைத்தவிர வேறு நாயன் உங்களுக்கு இல்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) நிச்சயமாக நான் உங்களுக்கு வரக்கூடிய மகத்தானதொரு நாளின் வேதனைக்குப் பயப்படுகின்றேன்.' என்று கூறினார்.'' அல்குர்ஆன் 7: 59


அல்குர்ஆனின் வசனங்களில் சிலவற்றுக்கு வேறு சில வசனங் களே விளக்கம் தரும் நிலையினை மேலே உள்ள வசனங்களில் நாம் காணுகின்றோம். 'இலாஹ்' என்பதன் கருத்து 'வணங்கப்படுபவன்' என்பதனாலேயே, அச்சொல்லுக்கு முன்னாலோ, பின்னாலோ அவ னையே வணங்குமாறு பணிக்கும் சொற்களை அல்லாஹ் பிரயோகித் திருப்பதனை மேலே குறிப்பிட்ட வசனங்களில் காணமுடிகின்றது.


முஷ்ரிகீன்களால் (இணைவைப்போரால்) எத்தனையோ கட வுளர்கள் வணங்கப்படுகின்றார்கள். ஆனால் அவர்கள் கடவுள்களாக இருப்பதற்குரிய தகைமைகள் எதனையும் பெற்றிருக்கவில்லை.உதா ரணமாக படைத்தல், காத்தல், நன்மைபுரிதல், தீங்கிழைத்தல், உயிர்ப் பித்தல், மரணிக்கச் செய்தல் போன்ற எதனையும் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை. இதனைப் பின்வரும் திருமறை வசனம் தெளிவு படுத்துகின்றது.


"(இணைவைத்து வணங்குவோர்) அவன் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவை எதொன்றை யும் படைக்கவில்லை. (எனினும்) அவைகளும் (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவையே! அன்றி (அவை) தங்களுக்கே யாதொரு நன்மை யையும், தீமையையும் செய்யச் சக்தியற்றவை. மேலும் உயிர்ப்பிக் கவோ. மரிக்கச்செய்யவோ, உயிர்கொடுத்து எழுப்பவோ அவை சக்தி யற்றவையாகவும் அவை இருக்கின்றன.'' அல்குர்ஆன் 25:3


எனவே படைப்பினங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல் லாஹ்வே உண்மையாக வணங்கப்படத் தகுந்தவன். இதனாலேயே அல்லாஹ் தன்னை மாத்திரமே வணங்குமாறு பணிக்கின்றான். அல்லாஹ் ஒருவனே உண்மையாக வணங்குவதற்கு உரியவனாக இருப் பதனால்,'லாஇலாஹ இல்லல்லாஹு எனும் கலிமாவுக்கு சரியான கருத்து, 'உண்மையாக வணங்கப்படுபவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை' என்பதாகும்.


அல்லாஹ்வுக்குரிய பண்புகள்


அல்குர் ஆனிலும், ஹதீஸ்களிலும் தெரிவிக்கப் பட்டுள்ள அல்லாஹுதஆலாவின் திருநாமங்களையும், அவனது பண்புகளையும் அவனுக்கு மாத்திரமே சொந்தமானதென விசுவாசங்கொள்வது முஸ் விம்கள் மீது கடமையாகும்.


அல்லாஹ்வுடைய பண்புகள் பரிபூரணமுடையவையாகும். ஆனால், மனிதனுக்கும் அவனது வாழ்க்கைக்கு உதவியாக அல்லாஹ் சில பண்புகளை அளித்திருக்கின்றான். அதனை திருமறையில் அல்லாஹ் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றான்.


"(நபியே!) நீர் கூறும்; அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், இருதயங்களையும் கொடுத் தவன். (அவ்வாறிருந்தும் அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவது வெகு சொற்பம் (ஆகும்). அல்குர்ஆன் 67:23


இவ்வாறு பார்வை, கேள்வி. பேச்சு, அறிவு, உயிர்,கோபம், இரக்கம் ஆகிய பண்புகள் மனிதர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப் பட்டிருந்தபோதும். அவை குறைபாடுடையவையும். நிரந்தரமற்றவையு மாகும். மனிதர்களது சில பண்புகளை நோக்கின். அவை எத்தகைய குறைபாடுகளை உடையன என்பதனை உணர்ந்து கொள்ளலாம். உதாரணமாக, மனிதனது பார்வையினை அவதானிப்பின், அது மனி தனது மிக உயர்ந்ததொரு புலனாக இருந்தபோதிலும், அது பல குறைபாடுகளை உடையது என்பது தெளிவாகப் புரியும். இரவின் இருட்டில் ஒளியின் துணையின்றி மனிதனால் எதனையும் காணமுடி யாது. பகல் வேளையிலும்கூட, இலட்சக்கணக்கில் பரந்திருக்கும் நட்சத்திரங்களை அவனால் பார்க்கமுடியாது. காணும் பொருட்களில் கூட, அவற்றின் வெளித்தோற்றத்தினை மாத்திரம் அவனால் பார்க்க முடியுமே ஒழிய, அப்பொருள்களின் உள்ளார்ந்த நிலையை அவனால் காணமுடியாது. இன்னும் விமான நிலையத்தில் நாம் காணும் நூற்றுக் கணக்கான பிரயாணிகளை ஏற்றிச்செல்லும் 'ஜெட்' விமானம் ஒன் றினை, அது மிக உயரத்தில் பறக்கின்ற வேளையில், எமது கண் பார்வையானது, அதனைப் பருந்திலும் சிறிய ஒன்றாகவே காட்டு கின்றது. இது உண்மையல்லவென்பது எம் அனைவருக்கும் நிதர்கன மாகத் தெரியும். மேலும், உருவமற்ற காற்று, மின்சாரம் போன்ற வற்றையோ, நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின் வர்க்கத்தையோ, ஒளியினால் படைக்கப்பட்ட மலக்குகளையோ எம்மால் காணமுடிவ தில்லை. இத்தனை குறைபாடுகளையும் உடையது மனிதப்பார்வை. ஆனால், எம்மைப் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பார் வையோ குறைகள் அனைத்தையும் விட்டும் தூய்மையானதாகும், பரிபூரணமானதாகும். அவனது பார்வையிலிருந்து எதுவுமே மறைய முடியாது.


அடுத்ததாக மனித அறிவினை எடுத்துக்கொள்வோம். ஏனைய படைப்புக்களைவிட மனிதன் பல வழிகளில் சிறந்தவனாகக் காணப்படு கின்றான். அவற்றுள் ஒன்று மனிதனது பகுத்தறிவு ஆகும். பகுத்தறி வின் காரணமாகவே தான் செய்வது நன்மையானதா, தீயதா என் பதை மனிதன் பிரித்துணர்ந்து கொள்கின்றான். இவ்வகையான மனித அறிவை நோக்கிலும் அது பல குறைபாடுகளைக் கொண்டிருப்பதனைக் காணலாம். மனிதனால் மறைவா முடியாது. விடயங்களை அறிய


மேலும் மனித அறிவானது வளர்ச்சியடையும் தன்மையுடை யது. சூழல, கல்வி, அனுபவம் என்பவற்றால் அது விருத்தியடை கின்றது. இன்னும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் முற்றிலும் சரி யெனக் கண்ட ஒன்றினை, மனித அறிவானது பிறபட்ட காலப்பகுதி யில் தவறென ஒதுக்குவதனை நாம் கண்கூடாகக் காண்கின்றோம் ஆனால் அல்லாஹ் உடைய அறிவோ குறைகளை விட்டும் அப்பாற் பட்டது. அல்லாஹ் தனது அறிவு எத்தகையது என்பதை அல்குர் ஆனில் விளக்கும் விதத்தினைச் சிறிது அவதானிப்போம்.


"(மனிதர்களே!) நீங்கள் உங்கள் வார்த்தைகளை இரகசிய மாகக் கூறுங்கள். அல்லது பகிரங்கமாகவே கூறுங்கள். (எவ்விதம் கூறியபோதிலும், இறைவன் அதனை நன்கு அறிந்துகொள்வான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் (மனிதர்களின்) இருதயங்களிலுளள் வைகளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.'' அல்குர்ஆன் 67:13.


"மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடந்தான் இருக் கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறி யார் தரையிலும், கடலிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறி வான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (அவனு டைய) தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை."


அல்குர்ஆன் 6:59.


இவ்வாறுதான் அவனது அனைத்துப் பண்புகளும் அமைந் துள்ளன. அவை யாவும் எதுவித குறையுமற்றவை, பரிபூரண மானவை, நிரந்தரமானவை. இப்பண்புகளில் யாரும், எதுவும் அவ னுக்கு இணையாக முடியாது. இணையாக்கவும் கூடாது. அவ்வாறு செய்வது ஷிர்க் ஆகும். அல்லாஹ்வுக்கு யாரும், எதுவும் ஒப்பாக மாட்டாது என்பதனையே பின்வரும் குர்ஆன் வசனம் குறிப்பிடு கின்றது.


"அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (யாவையும்) செவியுறுவோனாகவும், உற்றுநோக்கினவனாகவும் இருக்கின்றான்." அல்குர்ஆன் 42:11.

Comments