தவ்ஹீத் (ஏகத்துவம்) பற்றிய அறிவின் அவசியம்

 


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்,


தவ்ஹீத் (ஏகத்துவம்) பற்றிய அறிவின் அவசியம்


தவ்ஹீத் பற்றிய அறிவு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசிய மாகும். அதனை அடிப்படையாகக்கொண்டே இஸ்லாம் எனும் கோட்டை கட்டி எழுப்பப்பட்டுள்ளது. தவ்ஹீதில் ஏதாவது குறை பாடு இருப்பின், அக்குறைபாடு முஸ்லிம் ஒருவனின் வாழ்க்கையையே பயனற்றதாக ஆக்கிவிடும். மேலும், ஈமானின் அடிப்படைகளான அல்லா ஹ்வைப்பற்றிய விசுவாசம், அவனது மலக்குகளைப்பற்றிய விசு வாசம், அவனது வேதங்களைப்பற்றிய விசுவாசம், றசூல்மார்களைப் பற்றிய விசுவாசம், இன்னும் இறுதிநாள், நன்மை, தீமைகளின் ஏற் பாடுபற்றிய தெளிவான அறிவினை வழங்குவதும், அவ்விசுவாசம் உறுதிப்பட உதவுவதும் தவ்ஹீதே ஆகும். எனவே ஒவ்வொரு முஸ்லி மும் தனது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள தவ்ஹீத் (ஏகத்துவம்) பற்றிய அறிவானது அத்தியாவசியமான தாகும்.


ஏனைய அறிவுகளை விட தவ்ஹீத்பற்றிய அறிவு ஏன் பிரதானமானது?


உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், ஒரு வரையறுக்கப் பட்ட காலப்பகுதியில் இவ்வுலகில் வாழவேண்டியவனாக இருக்கின் றான். அவ்வாறே ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையைச் சீரான தாக ஆக்கிக்கொள்ள வழிகாட்டக்கூடிய ஒரு வாழ்க்கைத் திட்டமும் அவசியமானதாகும். அவ்வாழ்க்கைத் திட்டத்தினைச் சிலர் தாமா கவே வகுத்துக்கொள்ள முடியும் என எண்ணியவர்களாக, உலக வாழ்வே உண்மை வாழ்வு என்ற கண்ணோட்டத்தில் தமது மனோ இச்சைப்படி வாழ்க்கையை நடாத்துகின்றனர். இன்னும் சிலரோ, அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதக்கட்டளைகளைப் பின்பற்றுவது டன், அவற்றையே தம் வாழ்வின் வழிகாட்டியாகக் கொள்கின்ற னர். அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதக்கட்டளைகளுள் இறுதி யானதும், பரிபூரணமானதும் பரிசுத்த அல்குர்ஆன் ஒன்றே ஆகும். இதன் அடிப்படையில் அமைந்த, மனித வாழ்வுக்கான சம்பூர்ணமான வாழ்க்கைத் திட்டம், எம் பெருமானார் முகம்மது (ஸல்) அவர்களது வாழ்க்கை வழிமுறை ஆகும். அல்குர்ஆனையும், றசூல் (ஸல்) அவர் களது வழிமுறைகளையும் பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாம், அல் லாஹ் எமது வாழ்க்கை எவ்வாறிருக்க வேண்டுமென விரும்புகின் றான் என்பதை அறிந்திருத்தல் அவசியமாகும் .


உலக வாழ்க்கையினைச் சிறப்புறச் செய்வதற்காக நாம் கற் கும் அறிவியல்கள் யாவுமே எமது இவ்வுலக வாழ்வுடன் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் அல்லாஹ் எம்மிடம் எதை எதிர்பார்க்கின் றான் என்பதை எமக்குக் கற்றுத்தரும் தவ்ஹீத் ஆனது உலக வாழ் வில் மாத்திரமன்றி, நிரந்தரமான, முடிவில்லாத மறுமை வாழ்விலும் பயன் தருவதாக அமைகின்றது.


உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் பல்லேறு நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு செயற்படுகின்றனர். ஆனால் யாருடைய செயலை, அனைத்தையும் படைத்தவனான அல்லாஹ் பொருந்திக் கொள்கின்றான், ஏற்றுக்கொள்கின்றான் என்பது கேள்விக்குரியதா கும். இதற்கான விடையை எமக்கு தவ்ஹீத் பற்றிய அறிவு அளிக் கின்றது. அதாவது அல்லாஹ், தன்னை விசுவாசித்து, தனக்காக மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு மாத்திரமே நற்கூலி அளிப்ப துடன், மறுமையிலும் உயர் பதவிக்குரியதாகத் தெரிவுசெய்கின்றான். மாறாக, அல்லாஹ்வை விசிவாசிக்காது அல்லது சுயலாபம் கருதி அல்லாஹ்வுக்காகவே அல்லாது மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு செயலும் சரியானதெனக் காட்டப்பட்டுச் செய்யப்பட்டபோதிலும், அல்லாஹ்வுடைய நற்கூலிக்கோ, பொருத்தத்துக்கோ உரியதாகமாட் டாது.


அல்லாஹ்வை நிராகரிப்போரின் செயல்கள் எத்தகைய நிலையை அடைகின்றன. அவர்கள் இறுதியில் எத்தகையதொரு பயங்கர முடி வினை எதிர்கொள்வர் என்பதை அல்குர்ஆன் இவ்வாறு வர்ணிக் கின்றது.


"இன்னும், எவன் விசுவாசங்கொண்டதன் பின்னர் நிராகரிக் கின்றானோ, அவனுடைய (நற்) செயல் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ, அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவனாகவே இருப்


பான்." அல்குர்ஆன் 5:5. "எவர்கள் தங்களைப் போஷித்துப் பரிபாலிப்போனை நிரா கரிக்கின்றார்களோ, அவர்களுடைய செயல்களின் உதாரணம், சாம் பலைப் போலிருக்கிறது. புயல் காலத்தில் அடித்த கனமான காற்று


அதனை அடித்துக்கொண்டுபோய்விட்டது. தாங்கள் தேடிக்கொண்ட


தில் ஒன்றையும் அவர்கள் அடையமாட்டார்கள்." அல்குர்ஆன் 14:18.


எனவே, இதிலிருந்து நாம் விளங்குவது, அல்லாஹ் தன்னை விசுவாசங்கொண்டோரின் செயல்களை மாத்திரமே ஏற்றுக்கொள் கின்றான். ஏனையோரின் செயல் மறுமையில் எதுவித பயனு மற்றதாக மாறிவிடுகின்றன என்பதேயாகும். மேலும், விசுவாசங் கொண்டோரது செயல்களையும். அல்லாஹ். அச்செயல்கள் தனக்காக மேற்கொள்ளப்படாதவிடத்து அவற்றையும் ஏற்றுக்கொள்வதில்லை. பின்வரும் ஹதீஸ் இதனைத் தெளிவுபடுத்துவதனைக் காணலாம்.


றசூல் (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேள்வியுற்றதாக, அபூ ஹுறைறா (றளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். "மறுமை நாளில் முதலாவதாகத் தீர்ப்பளிக்கப்படவென அல்லாஹ்வின் பாதை யில் ஷஹீதாக்கப்பட்ட ஒருவரைக்கொண்டு வரப்படும். அவருக்கு அல்லாஹ், தான் வழங்கிய அருட்கொடைகளைப்பற்றித் தெரிவிப் பான். அதனை அவர் அறிந்துகொள்வார். அவரிடம் அல்லாஹ்,நீ அவ்வருட்கொடைமூலம் என்ன செய்தாய்? என்பதாகக் கேட்பான். அதற்கவர், நான் உனக்காகப் போரிட்டு ஷஹீதானேன் எனக் கூறு வார். அதற்கு அல்லாஹ், நீ கூறியது பொய், உன்னை வீரன் என்று கூறப்படுவதற்காகவே போரிட்டாய். அவ்வாறு கூறப்பட்டுவிட்டது. பின்னர், அவனை நரகிற்குக் கொண்டுசெல்லுமாறு கட்டளையிடப் பட்டு, முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகில் தள்ளப்படுவான்; அடுத்ததாக அறிவைக் கற்றதுடன், அதனை மற்றவர்களுக்கும் கற் றுக்கொடுத்து, அல்குர்ஆனையும் ஓதிய ஒரு மனிதனைக் கொண்டு வரப்படும். அவனுக்கும் அல்லாஹ், தனது அருட்கொடைகளை எடுத்துக்கூறி அதனை அவன் அறிந்துகொண்டதும், அதனைக் கொண்டு நீ என்ன செய்தாய்? என அவனிடம் வினவப்படும். அதற் கவன், நான் அறிவைக் கற்று, அதனை மற்றவர்களுக்கும் கற்பித் தேன். உனக்காக குர்ஆனை னை ஓதினேன் எனப் பதிலளிப்பான். அதற்கு, (அல்லாஹ்), நீ கூறியது பொய், உன்னை 'அறிஞன்' என்று கூறப் படுவதற்காகக் கல்வியைக் கற்றாய். 'காரீ' எனக் கூறப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய். (உலகில்) அவ்வாறே உனககுக் கூறப்பட்டு விட்டது. பின்னர், அவனையும் முகங்குப்புற இழுத்துச் செல்லப்படு மாறு ஏவப்பட்டு நரகில் தள்ளப்படும். அடுத்ததாக அல்லாஹ், அதி சுளவில் அருட்கொடைகளை வழங்கி, பலவகையான சொத்துக்களை யும் அளித்த (கொடை வள்ளலான) ஒரு மனிதனைக்கொண்டு வரப் படும். அவனிடமும் அல்லாஹ் தனது அருட்கொடைகளை நினைவு படுத்துவான். அதனை அவன் அறிந்துகொள்வான். அவனிடம், நீ அதன்மூலம் என்ன செய்தாய்? என வினவப் படுகையில், அவன், (அல் லாஹ்வை நோக்கி) நீ எவ்வெவ்வழிகளில் செலவழிக்கப்பட வேண் டும் என விரும்புவாயோ, அவ்வழிகளில் எல்லாம், உனக்காகச் செல வழித்தேன் எனப் பதிலளிப்பான். அதற்கு அல்லாஹ், நீ கூறியது பொய், உன்னை 'கொடை வள்ளல்' எனக் கூறப்படுவதற்காகவே செலவழித்தாய். அவ்வாறு உனக்குக் கூறப்பட்டுவிட்டது. அவனை யும், நரகத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஏவப்பட முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான்.''ஆதாரம்-முஸ்லிம்.


இந்த ஹதீஸ்மூலம் அல்லாஹ் தனக்காகவென மேற்கொள்ளப் படும் காரியங்களுக்கு மாத்திரமே மறுமைநாளில் நற்கூலி வழங்குகின்ட றான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனவே நாம் புரியக்கூடிய செயல்கள் யாவும், அல்லாஹ்வுக்காக எனும் எண்ணத்துடன், மனத் தூய்மையுடன் மேற்கொள்ளப்படல் வேண்டும். எனவே ஒருவனது செயல்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தினைப் பெறுவதாயின், சரி யான விசுவாசத்தோடு (ஈமானோடு) மேற்கொள்ளப்படல் வேண்டும். ஒருவனது விசுவாசம் சரியானதாக அமையவேண்டுமெனில், அவ னிடம் தவ்ஹீத்பற்றிய தெளிவான விளக்கம் இருத்தல் அவசியம் ஆகும். அவ்வேளையில மாத்திரமே, இஸ்லாமிய அடிப்படைகளுக்கு மாறான கொள்கைகளை அவன் தவிர்ந்துகொண்டு, நேர்வழியில் நடப்பதற்கு வழியேற்படும்.


உலக வாழ்வும், தவ்ஹீத் (ஏகத்துவம்) பற்றிய அறிவும்


தவ்ஹீத்பற்றிய தெளிவான அறிவைப் பெறாது, அல்லாஹ்வின் கட்டளைகளை நிராகரித்து வாழ்வோரது வாழ்க்கை எத்தகையது என்பதை அல்லாஹ், பின்வரும் குஆன வசனங்கள்மூலம் தெளிவு படுத்துகின்றான்.


"எவர்கள் நிராகரிக்கின் றார்களோ, அவர்கள் மிருகங்கள் உண் பதைப்போல் உண்டுகொண்டும், (மிருசுங்களைப்போல்) சுகத்தை அனுபவித்துக்கொண்டும் இருக்கிறார்கள். (எனினும்) அவர்கள் (இறுதியாகத்) தங்குமிடம் நரகந்தான். அல்குர்ஆன் 47:12.


இவ்வசனத்தின்மூலம் தவ்ஹீத் பற்றிய விளக்கமின்றி நிராகரிப் போரும், மிருகங்களும் சமமாகவே கருதப்படுகின்றனர் என்பது புல னாகின்றது. ஆயினும் அல்குர் ஆனில் இன்னுமோர் இடத்தில், உண் மையை அறிந்து, குறுகிய உலக நோக்கங்களுக்காக, தமது மனோ இச்சைகளைப் பின்பற்றி வாழ்வோரை, மிருகங்களையும் விட இழி வானவர்கள் என அல்குர்ஆன் பின்வருமாறு வர்ணிக்கின்றது.


"நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் அநேகரை நாம் நரகத்திற்காகவே படைத்திருக்கின்றோம். (அவர்கள் எத்தகையோ ரெனில்) அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. * எனினும் அவற் றைக் கொண்டு (இவ்வுலக அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்கமாட் டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு. எனினும் அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்கமாட்டார் கள். இத்தகையோர் மிருகங்களைப் போன்றவர்கள் - அவ்வாறல்ல, அவற்றைவிட அதிகமாக வழிகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையோர்தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்க ளாவர்." அல்குர்ஆன் 7:179.


எனவே, உண்மையான தவ்ஹீத் பற்றிய அறிவைப் பெற்று வாழ்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமாகும். அதனைப் பெற் றுக்கொள்ளக்கூடிய ஒரேவழி அல்லாஹ்வுடைய வேதங்கள் மூலமும், அவனது தூதர்களின் வாக்குகள் மூலமும் அந்த அறிவைப் பெறுதல்.

Comments