உனது மார்க்கம் என்ன? என உன்னிடம் வினவப்பட்டால் நீர் கூறும்;

 


இரண்டாவது அம்சம்: ‘தீன்‘ பற்றிய அறிவு


உனது மார்க்கம் என்ன? என உன்னிடம் வினவப்பட்டால் நீர் கூறும்;


எனது மார்க்கம் ‘இஸ்லாம்'. இஸ்லாம் என்பது, அல்லாஹ்வின் ஏகத்துவத்திற்கு முற்றிலும் அடிபணிந்து, அவனது கட்டளைகளுக்கு முழுமையாகப் பணிந்து நடந்து இணைவைத்தல், இணைவைப்போர் ஆகியோரை விட்டு விலகி நடத்தல் எனப் பொருள்படும்.


இஸ்லாம் மூன்று படித்தரங்களைக் கொண்டுள்ளது. அவை: இஸ்லாம், ஈமான், இஹ்ஸான்.


ஒவ்வொரு படித்தரமும் சில கொண்டுள்ளது. அம்சங்களைக்


1. இஸ்லாம்


இஸ்லாத்தின் அம்சங்கள் ஐந்து. அவையான :


1. "அல்லாஹ்வைத் தவிர (வணங்குவதற்கு, சட்டம் இயற்றுவதற்கு, கீழ்படிவதற்கு) வேறு இறைவன் இல்லை" என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும், திருத்தூதரும் ஆவார்" என்றும் சான்று பகர்தல்.


2. தொழுகையை நிலை நிறுத்தல்.

3. ஸகாத் கொடுத்து வரல்.


4. ரமழான் மாதத்தில் நோன்பிருத்தல்.


5. ஹஜ்ஜை நிறைவேற்றல்.


2. ஈமான்


ஈமானின் அம்சங்கள் ஆறு; அவையாவன:


1. அல்லாஹ் ஒருவன் என நம்புதல்.


2. அல்லாஹ்வின் மலக்குகளை நம்புதல்.


3. அல்லாஹ்வின் வேதங்களை நம்புதல்.


4. அல்லாஹ்வின் தூதர்களை நம்புதல்.


5. மறுமை நாளை நம்புதல்.


6. நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே உள்ளன எனும் 'கலா கத்ரை' நம்புதல்.


3. அல் இஹ்ஸான்


இஹ்ஸான் என்பது; நீ அல்லாஹ்வை காண்கின் றாய் என நினைத்து அவனை வணங்குவது. அவ்வாறு நீர் அவனைக் காணமுடி யாவிட்டாலும் அவன் உன்னைக் கண்டு கொண்டிருக்கின்றான் என்பதை உள்ளத்தில் கொண்டு அவனை வணங்குவதாகும்.


இஹ்ஸான் என்பதற்கு அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் தெளிவான ஆதாரங்கள் உண்டு. இறைவன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.


"நிச்சயமாகவே எவர்கள் (மெய்யாகவே) பக்தியுடையவர் களாக இருக்கின்றார்களோ அவர்களுடனும், எவர்கள் (பிறருக்கு) நன்றி செய்கின்றார்களோ அவர்களுடனும் தான் அல்லாஹ் இருக்கின்றான்."


(அல்குர்ஆன் 16 : 128)


இஸ்லாத்தின் அடிப்படையும், அதன் வரை விலக்கணமும் எது? என உன்னிடம் வினவப்பட்டால், நீர் கூறும்;


அவை இரண்டு.


1.


அல்லாஹ்வுக்கு மாத்திரமே நாம் வணங்க வேண்டும்.


இதற்கு ஆதாரமாக அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது;


"நபியே நீர் கூறும்; வேதம் அருளப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்குமிடையில் உள்ள பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் நாம் அடிபணிய மாட்டோம். அவனோடு எதனையும், எவரையும் இணைவைக்க மாட்டோம்."


(அல்குர்ஆன் 3:54)


2. அல்லாஹ் விதித்த சட்டதிட்டங்களுக்கு ஏற்ப அவனை நாம் அடிபணிதல் வேண்டும். 'பித்அத்'தான நூதன வழிமுறைகள் மூலம் அவனை அடிபணிதல் கூடாது.


இதற்கு ஆதாரமாக ஹதீஸ் இவ்வாறு கூறுகிறது;

"நம்முடைய விஷயத்தில் (மார்க்கத்தின் போதனை களோடு ஒத்துப்போகாத ஒரு செயலை எவராவது செய்யின் அது ஏற்றுக்கொள்ளப்படாது ஒதுக்கப்படும் அதாவது நிராகரிக்கப்படும்"


அறிவிப்பு: முஸ்லிம்.

Comments