உனது ‘நபி' யார்? என உன்னிடம் வினவப்பட்டால் நீர் கூறும்;


 மூன்றாவது அம்சம்:


நபி (ஸல்) பற்றி அறிதல்


உனது ‘நபி' யார்? என உன்னிடம் வினவப்பட்டால் நீர் கூறும்;


முஹம்மத் (ஸல்) அவர்கள் தந்தை பெயர் அப்துல்லாஹ். இவர் தந்தை பெயர் அப்துல் முத்தலிப். இவர் தந்தை பெயர் ஹாஷிம். ஹஷிம் என்பவர் குறைஷி வம்சத்தைச் சேர்ந்தவர். குறைஷிகள் அரபிகளாவர். அரபியர் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மகன் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளாவர்.


முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டார்கள். அல்லாஹ் தனது மார்க்கத்தை அவர்கள் மூலம் பூர்த்தியாக்கிய பின்னர் அங்கேயே அவர்கள் இறையடி எய்தினார்கள். இவர் அனைத்து நன்மையான விடயங்களையும் தனது உம்மத்திற்கு அறிவித்துக் கொடுத்ததுடன், அனைத்து தீமைகளிலிருந்தும் எச்சரித்து விளக்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் மீதும் ஏனைய நபிமார்கள் மீதும் அல்லாஹ்வின் நல்வாழ்த்துக்களும், சாந்தியும் உண்டாவதாக.


ஹிஜரத்


'ஹிஜ்ரத்' என்றால் என்ன? என உன்னிடம் வினவப்பட்டால், நீர் கூறும்;

‘ஹிஜ்ரத்’ என்பது இணைவைப்போர்களது நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டிற்கு நகர்ந்து செல்வதைக் குறிக்கும்.


'ஹிஜ்ரத்' செய்வதன் சட்ட விளக்கம் என்ன? என உன்னிடம் வினவப்பட்டால், நீர் கூறும்;


மறுமை நாள்வரை ஹிஜ்ரத் செய்வது முஸ்லிம் உம்மத் மீது பாழாகும்.


மரணத்தின் பின் வாழ்வு


மனிதர்கள் இறந்த பின்னர் மீண்டும் எழுப்பப் படுவார்கள். மேலும், இறந்த பின் மீண்டும் எழுப்பப் படுவதை மறுத்த ஒருவர் நிராகரிப்பாளராகக் கருதப்படுவாரா? என உன்னிடம் வினவப்பட்டால், நீர் கூறும்; ஆம்


அல்குர்ஆன் இதனைப் பின்வருமாறு உறுதிப் படுத்துகிறது.


"(அவர்களிடம்) நீர் கூறும்; இல்லை என் அதிபதி மீது சத்தியமாக! நீங்கள் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள். பின்னர்,(உலகில்) நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று உங்களுக்கு அறிவித்துத் தரப்படும். இவ்வாறு செய்வது அல்லாஹ் வுக்கு மிகவும் எளிதானதாகும்."


(அல்குர்ஆன் 64:7)


தொழுகை


இஸ்லாத்தை சாட்சிகூறி ஏற்றுக்கொண்ட பின்னர், கட்டாய கடமையாக தொழுகை விதியாகி விடுகிறது. தொழுகையை நிறைவேற்ற முதல் பின்வரும் அம்சங்களை அறிதல் வேண்டும்.


1. தொழுகையின் 'ஷர்த்துகள்' (நிபந்தனைகள்)


2. தொழுகையின் 'ருக்கூன்கள'' (கட்டாயமான அம்சங்கள்)


3. தொழுகையின் 'வாஜிபுகள்' (கட்டாய கடமைகள்)


தொழுகையின் 'ஷர்த்துகள்' எத்தனை? என உன்னிடம் கேட்கப்பட்டால், நீர் கூறும்; ஒன்பது என்பதாக


1. இஸ்லாத்தை ஏற்றிருத்தல்.


2. சுத்தி சுவாதீனமுடையவராக இருத்தல்


3. எதையும் பிரித்தறியும் வயதுடையவராக இருத்தல்.


4. சுத்தமுள்ளவராக இருத்தல்.


5. நஜீஸ் போன்றவற்றை விட்டும் நீங்கியிருத்தல்.


6. தொழுகை நேரமாயிருத்தல்.


7. அவரத்தை மறைத்தல்.


8. கிப்லாவை முன்னோக்கல்.


9. நிய்யத்து வைத்தல்.


கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகள்:

'சுத்தமாக இருத்தல்' என்பது பெருந்துடக்கு, சிறுதுடக்கு என்பவற்றிலிருந்து சுத்தமாக இருத்தல் எனப்பொருள்படும். 'பெருந்துடக்கு' என்பது உடல் முழுவதையும் நீரால் கழுவுவதன் மூலமும், 'சிறுதுடக்கு' என்பது வுழுச் செய்வதன் மூலமும் நீக்கப்படும்.


வுழுவின் பர்ளுகள் எத்தனை? என உன்னிடம் வினவப்பட்டால் நீர், அவை ஆறு எனக் கூறும்:-


1. முகம் கழுவுதலுடன் வாய்க்கும், நாசுக்கும் தண்ணீர் செலுத்துதல்.


2. முட்டுக்கை வரை இரு கைகளையும் கழுவுதல்.


3. தலையின் எல்லாப் பகுதிகளையும் நீரால் தடவுதல். அத்துடன் இரு காதுகளையும் தடவுதல்.


4. கரண்டைக் கால்வரை இரு கால்களையும் கழுவுதல்.


5. மேற் சொன்னவற்றை ஒழுங்குரச் செய்தல்,


6. மேற் சொன்னவற்றை ஒரேமுறையில் நிறைவேற்றல்.


வுழுவை முறிக்கும் காரியங்கள் எத்தனை? 67 607 உன்னிடம் வினவப்பட்டால், அவை எட்டு என்பதாக நீர் கூறும்.


1.. முன், பின் இரு துவாரங்களினூடே ஏதும் வெளிப்படல்.


2. இரு துவாரங்கள் தவிர்ந்த உடலின் ஏனைய இடங்களிலிருந்து அதிகமான இரத்தம் போன்ற நஜீஸ்கள் வெளிப்படல்.


3. புத்தி நீங்குதல்.


4. முன், பின் துவாரங்களைக் கையால் தொடுதல்.


5. இச்சையுடன் பெண்ணைத் தொடுதல்.


6. ஒட்டக இறைச்சி சாப்பிடுதல்.


7. இறந்தவரது உடலைக் குளிப்பாட்டுதல்.


8. இஸ்லாத்தை விட்டும் மறுதளித்தல். இந்நிலையை விட்டும் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!


தொழுகையின் 'ருக்கூன்கள்' கட்டாய அம்சங்கள் எத்தனை? என உன்னிடம் வினவப்பட்டால், அவை பதினான்கு என நீர் கூறும்.


1. தனக்கு முடியுமாக இருக்கும் போது நின்று தொழல்.


2. தக்பீரதுல் இஹ்ராம் கட்டுதல்.


3. பாதிஹா சூராவை ஓதுதல்.


4. ருகூஃவுக்குச் செல்லல்.


5. ருகூஃவிலிருந்து நிலைக்கு வருதல்.


6. ஏழு உறுப்புக்கள் நிலத்தில் படும் வகையில் சுஜுத் செய்தல்.


7. சுஜுதிலிருந்து எழுந்திருத்தல்.


8. இரண்டு சுஜுதுகளுக்கிடையில் அமர்ந்திருத்தல்.


9. மேற் சொன்ன எல்லா அம்சங்களி (ருக்கூன்களி)லும் அமைதியைப் பேணல்.


4. முன், பின் துவாரங்களைக் கையால் தொடுதல்.


5. இச்சையுடன் பெண்ணைத் தொடுதல்.


6. ஒட்டக இறைச்சி சாப்பிடுதல்.


7. இறந்தவரது உடலைக் குளிப்பாட்டுதல்.


8. இஸ்லாத்தை விட்டும் மறுதளித்தல். இந்நிலையை விட்டும் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!


தொழுகையின் 'ருக்கூன்கள்' கட்டாய அம்சங்கள் எத்தனை? என உன்னிடம் வினவப்பட்டால், அவை பதினான்கு என நீர் கூறும்.


1. தனக்கு முடியுமாக இருக்கும் போது நின்று தொழல்.


2. தக்பீரதுல் இஹ்ராம் கட்டுதல்.


3. பாதிஹா சூராவை ஓதுதல்.


4. ருகூஃவுக்குச் செல்லல்.


5. ருகூஃவிலிருந்து நிலைக்கு வருதல்.


6. ஏழு உறுப்புக்கள் நிலத்தில் படும் வகையில் சுஜுத் செய்தல்.


7. சுஜுதிலிருந்து எழுந்திருத்தல்.


8. இரண்டு சுஜுதுகளுக்கிடையில் அமர்ந்திருத்தல்.


9. மேற் சொன்ன எல்லா அம்சங்களி (ருக்கூன்களி)லும் அமைதியைப் பேணல்.

Comments