அல்லாஹ்வை அறிவது எப்படி?
தன்னைப் படைத்த அல்லாஹ்வைப்பற்றி அறியவேண்டியது ஒவ்வொரு மனிதனதும் கடமையாகும். அல்லாஹ்வைப்பற்றி, மனித வாழ்வின் ஆரம்ப காலப்பகுதியில் இருந்தே பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன. அல்லாஹ்வைப்பற்றிய சரியான, தெளி வான அறிவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரேவழி அல்குர் ஆனில் அல்லாஹ் தன்னைப்பற்றிக் கூறியவற்றின்மூலமும், அவனது இறுதித் தூதரான முகம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றிக் கூறிய வற்றைக்கொண்டும் அறிதல் ஆகும்.
சூறத்துல் இஹ்லாஸில் அல்லாஹ், தன்னைப்பற்றிக் கூறுகை யில், தான் தனித்தவன், தேவையற்றவன், இணையற்றவன் எனக் கூறுகின்றான். நாம் அனைவரும் தொழுகைகளின் பின்னர் ஓதிவரும் 'ஆயத்தல் குர்ஸீயிலும்' அல்லாஹ் தன்னைப்பற்றிப் பின்வருமாறு தெரிவிக்கின்றான்.
"அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் (வேறு யாரும்) இல்லை. (அவன்) நித் தியமானவன். (என்றும்) நிலையானவன். அவனை சிறுதூக்கமும், நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமிபிலுள்ளவை யாவும் அவ னுடையவையே! அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் எவர் தான் பரிந்துபேச (சிபாரிசு செய்ய) முடியும்? அவர்களுக்கு எதிரில் உள்ளவற்றையும், புறம்பாக உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய நாட்டமின்றி, அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரசாட்சி வானங்களிலும், பூமியிலும் பரவி யிருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாத்து, இரட்சிப்பது அவ னுக்கு சிரமமன்று. மேலும், அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தான வன்." அல்குர்ஆன் 2:255.
மேலும் அல்லாஹ்வைப்பற்றியும், அவனது மகத்துவம்பற்றியும் அறிந்துகொள்ள அவனது படைப்புக்களைப்பற்றிச் சிந்திக்குமாறு அல்குர் ஆனும், பெருமானார் முகம்மது (ஸல்) அவர்களது ஹதீஸ் களும் எம்மைப் பணிக்கின்றன. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத் தும் கணணியையோ (கல்குலேட்டரையோ). பாரிய வேலைகளைத் துரிதமாகப் புரியும் சும்பியூட்டரையோ காணும்போது நாம் பிரமிப் பினால் மலைத் துவிடுகின்றோம். அவற்றை உருவாக்கிய விஞ்ஞானி களையும், அவர்களது அறிவினையும் போற்றுகிறோம், பாராட்டு கிறோம். ஆனால் கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும், கோடிக் கணக்கான உயிரினங்களையும் கொண்டு எத்தனையோ அற்புதங் களையும் தம்மகத்தே அடக்கியுள்ள வானங்களைப்பற்றியோ, பூமி யைப்பற்றியோ, அவற்றில் உள்ள படைப்பினங்கள்பற்றியோ நாம் சிந்திப்பதில்லை. இவ்வாறான சிந்தனையே உண்மையான அறிவினைப் பெற அவசியம் என அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது.
''ஏழு வானங்களையும், அவைகளைப்போல் பூமியையும் அல் லாஹ்தான் சிருஷ்டித்தான். அவைகளுக்கிடையில் (தினசரி நிகழக் கூடிய சகல விடயங்களைப்பற்றிய) சுட்டளைகளை இறக்கிக்கொண்டேஇருக்கின்றான். (ஆகவே, விசுவாசிகளே!) அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுடையோன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் அறிவால் எல்லாவற்றையும் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கிறான் என்பதையும் நீங் கள் (திட்டமாக) அறிந்துகொள்வீர்களாக. அல்குர்ஆன் 65:12.
(இவ்வாறே) வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ அத் தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனுதினமும்) செல்கின்றனர். எனினும் அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக் கணித்தே விடுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை விசுவாசிப்பதில்லை. (அவ்வாறு அவர்களில் எவரேனும் விசுவாசித்த போதிலும் அவனுக்கு) அவர்கள் இணைவைக்காமலும் இல்லை." அல்குர்ஆன் 12:105.
"இறக்கைகளை விரித்துக்கொண்டும், மடித்துக்கொண்டும் இவர்களுக்குமேல் (ஆகாயத்தில் அணிஅணியாகப் பறக்கும்) பட்சிகளை இவர்கள் கவனிக்கவில்லையா? ரஹ்மானைத் தவிர (மற்றெவரும்) அவைகளை (ஆகாய₂தில் தூக்கிப்) பிடித்துக்கொணடிருககவில்லை. நிச்சயமாக அவன் யாவற்றையும் உற்று நோக்கியவனாக இருக்கின் றான்.'' அல்குர்ஆன் 67:19
இது மாத்திரமனறி, அறிவுடைய நல்லடியார்களைப்பற்றி அல்லாஹ் கூறுகையில், அவர்களைப் பினவருமாறு விபரிக்கின்றான்.
"வானங்கள், பூமியின் படைப்பிலும், இரவு, பசுலின் மாற் றத்திலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகளிருக் கின்றன. (அறிவுடைய) இத்தகையோர் (தாங்கள) நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்கள், பூமியின் படைப்புப்பற்றிச் சிந்தித்து, எங்கள் இறைவனே! நீ இவற்றை லீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ இரட்சிப்பாயாக." (எனப் பிரார்த்தனை செய்வார்கள்). அல்குர்ஆன் 3:190,191.
இவ்வாறு அல்லாஹ், அல்குர்ஆனில் பல இடங்களில், படைப் புக்களைப்பற்றிச் சிந்தித்து. அதன்மூலம் தன்னை அறியுமாறு பணிக் கின்றான். அல்லாஹ்வின் படைப்புக்களுள் வானமும். பூமியும் ஒரு புறமிருக்க, நாம் வாழும் பூமியில் காணப்படக்கூடிய தாவரங்கள். பிராணிகள், பறவைகள, பூச்சியினங்கள், மீனினங்கள்பற்றி தற்கால விண்வெளி யுகத்திலும்கூட பூரணமாக அறிய முடியாமல் மனித அறிவு தவித்துக்கொண்டிருக்கிறது. எனவேதான் மனித அறிவுக்கு எட்டிய விடயங்களைப்பற்றிச் சிந்திப்பதன்மூலம்,படைப்பாளனைப் பற்றிய அறிவினைப் பெறுமாறு அல்குர்ஆன் எம்மைத் தூண்டுகின் றது. றசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "அல்லாஹ்வைப்பற்றிச் சிந்திக் காமல், அல்லாஹ்வின் படைப்புக்களைப்பற்றிச் சிந்தியுங்கள்."
ஆதாரம் அஹ்மத்.)
எனவேதான் அல்லாஹ்வின் 'தாத்'தினைப் (உள்ளமையினைப்) பற்றிச் சிந்திப்பது வழிகேடாகவும், அவனது படைப்பினங்களைப் பற்றிச் சிந்திப்பது நேரிய வழிக்கு இட்டுச் செல்வதாகவும் அமை வதனைக் காணலாம். இவ்வாறில்லாமல், அல்லாஹ்வை அறியவேண் டும் என்பதற்காக, குர்ஆன். ஹதீஸில் இல்லாத வர்ணனைகளைக் கொண்டு அவனை வர்ணிப்பதும், வேற்றுமத சித்தாந்தங்களின் அடிப் படையில் அல்குர்ஆனின் வசனங்களுக்குத் தவறான விளக்கம் அளிப் பதும், இஸ்லாத்தை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும், இறைவனது நிரந்தர தண்டனைக்கு உள்ளாவதற்கும் வழிகோலும் செயல்களாகும்.
Comments
Post a Comment