அல்லாஹ்வுக்கும், அவனது படைப்புகளுக்கும் இடையிலான தொடர்பு
"அல்லாஹ்வே சகல பொருட்களையும் படைத்தவன், அவனே சகலவற்றின் பாதுகாவலன்." அல்குர்ஆன் 39:62.
"(இவ்வுலகிலுன்ள) ஒவ்வொன்றையும் படைத்தவன் அல்லாஹ் தான், அவன் ஒருவனே! (அவனுக்கு இணை, துணையில்லை). அவனே (உலகில் உள்ள யாவையும்) அடக்கி ஆளுபவன்." அல்குர்ஆன் 13:16.
மேற்குறிப்பிட்ட திருமறை வசனங்களில் அல்லாஹுதஆலா, தானே அனைத்தையும் படைத்தவன் என்பதனை வலியுறுத்திக் கூறு வதனைக் காணலாம். படைத்தவனும், படைப்புக்களும் ஒன்றே எனப் பகுத்தறிவுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். படைப்பாள னாகிய அல்லாஹ்வுக்கு முற்றிலும் மாறுபட்டவைகளே அவனது படைப்புக்கள் ஆகும். மனிதனது படைப்பிற்கு முந்திய நிலைமை யைப்பற்றிக் கூறுகின்ற அல்லாஹ்.
"ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளிவருவதற்கு) முன் னர் ஒரு காலம் செல்லவில்லையா? (அதில்) அவன் இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையிலிருந்தான்." அல்குர்ஆன் 76:1.
இதிலிருந்து மனிதன் இல்லாமையிலிருந்து உருவாக்கப்பட்ட வன், தொடக்கமும், முடிவும் இல்லாத அல்லா ஹ்விலிருந்தும், அவன் வேறுபட்டவன் என்பதும் தெளிவாகினறது. மேலும், அல்லாஹுத ஆலாவின் படைப்பினங்களுள் எம் பெருமானார் முகம்மது (ஸல்) அவர்களே மிகவும் சிறப்புக்கு உரியவர்கள் ஆவார்கள். அவர்களைப் பற்றிப் பல இடங்களில் அல்லாஹ் தனது திருமறையில் புகழ்ந்துரைக் கின்றான்.
''(நபியே!) நாம் உம்மை உலகத்தார் யாவருக்கும் ஓர் அரு ளாகவே அனுப்பி இருக்கிறோம்." அல்குர்ஆன் 21:107.)
''(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணங்கள் உடைய வராகவே இருக்கின்றீர்." அல்குர்ஆன் 68:4.
"ஆனால் அவரோ அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார் களுக்கு(க் கடைசி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக் கிறார்கள்.'' அர்குர்ஆன் 33:40.
"நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும், நபி யின்மீது ஸலவாத்துச் சொல்லுகின்றார்கள். (ஆகவே) விசுவாசி களே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்." அல்குர்ஆன் 33:56.
இவ்வாறு அல்லாஹ்வின் புகழுக்கும். பாராட்டுக்கும் உரித் தான றசூல் (ஸல்) அவர்கள்மீது ஸலவாத்துச் சொல்லுமாறு எம்மை யும் அல்லாஹ்வே பணிக்கின்றான். ஆயினும், றசூல் (ஸல்) அவர் சுளுக்கு நாம் அளிக்கும் புகழுரையானது எவ்வாறு அமைதல் வேண் டும் எனும் வரையறையினையும் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறாமல் விடவில்லை. றசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக, உமர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"மர்யமின் மகன் (ஈஷா (அலை) ) அவர்களை கிறிஸ்தவர்கள் அளவு கடந்து புகழ்ந்ததுபோன்று என்னை நீங்கள் அளவுகடந்து புகழ்ந்துவிடாதீர்கள். நான் (அல்லாஹ்வின்) ஒரு அடியானேயாவேன். எனவே, (என்னை) அல்லாஹ்வின் அடியான், அவனது தூதர் என்று கூறுவீர்களாக."ஆதாரம் புகாரி, முஸ்லிம்.
இந்த ஹதீஸில் மிக முக்கியமானதொரு அம்சத்தி. என றசூல் (ஸல்) அவர்கள் எடுத்துக்காட்டுகின்றார்கள். அதாவது கிறிஸ்தவர் கள், தமக்குத் தூதராக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஈஸா (அலை) அவர்களை, அல்லாஹ் வானளவில் உயர்த்திக்கொண்டபின், அவர் அல்லாஹ்வின் குமாரர் என்றும், அல்லாஹ்வே அவாது வடிவில் மக் களை வழிகாட்ட உலகிற்கு வந்தான் என்றும் நம்பிக்கை கொள்ள லாயினர். இவ்வாறாகத் தன்னைப் புகழ்வதனை, றசூல் (ஸல்) அவர் கள் தடை செய்துள்ளார்கள். மாறாக, தம பணிவினையும், தமது யதார்த்த நிலையினையும், தான் ஓர் அடியான், தூதர் எனும் வார்த்தைகள் மூலம் உறுதிப்படுத்தியுமுள்ளார்கள். பின்வரும் திருமறை வசனங்களும் றசூல் (ஸல்) அவர்களது கூற்றினையே மேலும் தெளிவு படுத்துகின்றன.
"முகம்மத் (ஸல்) அவர்கள் ஒரு தூதரேயன்றி வேறல்ல. அவ ருககு முன்னரும் (இவ்வாறே) தூதர்கள் பலர் சென்றிருக்கின்றார் கள். இவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டுவிட்டால், நீங் கள் புறங்காட்டிச் சென்றுவிடுவீர்களோ?" அல்குர்ஆன் 3:144.
"(நபியே!) நீர் கூறும்: "நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்களுடைய நாயகன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே. எவன் தன் இறைவனைக் சந்திக்க விரும்புகிறானோ அவன் நற்கருமங்களைச் செய்து. தன் இறைவனுக்கு ஒருவரையும் இணை யாக்காது (அவனையே) வணங்கிவருவானாக!'' அல்குர் ஆன் 18:110.
மேலும் ஓரிடத்தில்,
''(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் (முகம்மது (ஸல்) என்னும்) தன். அடியாரை (க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியி லிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, ஓரிரவில் அழைத்துச் சென்றான்." அல் குர்ஆன் 17:1.
இவ்விரு வசனங்களும் எம் பெருமானார் றசூல் (ஸல்) அவர் கள் அல்லாஹ்வின் ஒரு அடியார் என்பதையும், வெளித்தோற்றத் தில் மாத்திரமன்றி, யதார்த்தத்திலும் அவர்கள் ஒரு மனிதர்தான் என்பதையும் தெள்ளத்தெளிவாக எடுத்தியம்புகின்றன. அல்குர்ஆனின் வசனங்களுக்கு தவறான விளக்கம் கூறுவதானது எம்மை நரகிற்கு இட்டுச்செல்லும் ஒரு நடவடிக்கையேயாகும். மனிதர்களுள் உயர் வான ஒருவராக றசூல் (ஸல்) அவர்கள் இருந்தபோதிலும், அவர் கள் அல்லாஹ்வின் பண்புகளுக்கு உரியவராகமாட்டார்கள்.
எனவே, இவற்றிலிருந்து நாம் வரக்கூடிய முடிவு யாதெனில், "அல்லாஹ் வேறு, அவனது படைப்புக்கள் வேறு" என்பதேயாகும். இதுவே சுன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கையுமாகும். இதற்கு மாறாக, 'லாஇலாஹ இல்லல்லாஹு எனும் கலிமாவுக்கு 'அல்லாஹ் வைத் தவிர வெறொன்றுமில்லை' எனப் பொருள் கூறுவதும், 'எல் லாம் அவனே' எனக் கூறுவதும், 'அல்லாஹ்வே அவனது படைப்பு களின் தோற்றங்களில் வெளியாகியுள்ளான்' எனக்கூறுவதும், வேற்று மதக் கொள்கைகளின் செல்வாக்குக்கு உட்பட்ட சிலரால் வெளி யிடப்பட்டதும், பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளை ஆதாரமாகக் கொண்டு தெரிவிக்கப்படுவதுமான, தவ்ஹீத்பற்றி, முற்றி லும் தவறாக அளிக்கப்படும் விளக்கம் ஆகும். இக்கொள்கை அதனை நம்புபவர்களை இஸ்லாத்தைவிட்டும் விலக்கிவிடக்கூடியது. மதமாற் றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதில் எதுவித ஐயமும் கிடையாது. யா அல்லாஹ்! எங்களை உனது கோபத்திற்குள்ளானவர்களினதும், வழிதவறியவர்களினதும், வலையிலிருந்து காப்பாற்றி, உனது நேர் வழி நடந்த நல்லடியார்களின் பாதையில் நடாத்திவைப்பாயாக.
இறுதியாக, முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமதக் கருத்துக்கள் எவ்வாறு செல்வாக்குப்பெறத் தொடங்கின என்பதை வரலாற்று ரீதியாக சுருக்கமாக நோக்குதல் பொருத்தமுடையதாகும். இஸ்லா மிய வரலாற்றினை நோக்கின், அப்பாஸியர் ஆட்சிக்காலத்தின்போது இந்திய, கிரேக்க, ரோம, பாரசீக நாகரீகங்கள் பற்றியும், அவற்றின் அறிவியல், தத்துவங்கள்பற்றியும் முஸ்லிம்கள் அறியவும், அவற்றைக் கற்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வேளையில், அல்லாஹ்வின் நல் லடியார்களான, அவனது வரம்புக்குட்பட்டு நடக்கும் அறிஞர்கள், மார்க்க வரையறைகளுக்கு உட்பட்டவற்றை ஏற்று. அவற்றில் மேலும் ஆராய்ச்சிகள் செய்து அறிவியல் துறைக்குப் பெரும் தொண்டாற்றி னர். வேறு சிலரோ, இஸ்லாத்தின் வரையறைகளையும் மீறி, வேற்று மதத் தத்துவங்களைக் கற்று அவற்றின் அடிப்படையில் குர்ஆனை யும், ஹதீஸையும் ஆராயவும், விளக்கமளிக்கவும் முற்பட்டனர். இவ் வாறானோர்களாலேயே, இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்கள் இஸ் லாமிய வடிவில் பரப்பப்பட்டன. அவை சிலகாலம், சிலர் மத்தியில் காணப்பட்டபோதிலும். இறுதியில் அவற்றின் தவறுகள் உணரப் பட்டு, அக்காலத்திலேயே முற்றாக ஒதுக்கப்பட்டுவிட்டன. அக்கருத் துக்களைப் பரப்பியோரும் முஸ்லிம் சமூகத்தினால் இனங்காணப் பட்டு விலக்கப்பட்டனர். இவ்வகையான சில கருத்துக்கள் இன்று எம்மிடையே மீள உயிர்பெற்று புதிய வடிவங்களில் தலைகாட்டி யுள்ளன. இவை எமது ஈமானைப் பாழாக்கி, இம்மையிலும், மறுமை யிலும் எம்மை நற்பேறற்றவர்களாகவும், இறைவனின் தண்டனைக் குள்ளானவர்களாகவும் ஆக்கிவிடாது நாம் மிக அவதானமாக இருத் தல் வேண்டும். ஷரீஅத்தால் புறக்கணிக்கப்பட்ட, ஷரீஅத்திற்கு மாறான கொள்கைகளை ஏற்ற நிலையில், நாம் எவ்வளவு பிரயாசை யுடன் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற நல் அமல் களைச் செய்தபோதிலும் அவை எதுவித பயனும் அளிக்கமாட்டாது. இந்நிலைக்குள்ளாகாது அல்லாஹ். முஸ்லிம்கள் அனைவரையும் பாதுகாப்பானாக.
Comments
Post a Comment