அல்லாஹ்வின் திருப்பெயரால் ..
'நிச்சயமாக, எந்தச் சமுதாயம் தன் நிலையைத் தானே மாற்றிக் கொள்ளவில்லையோ அந்தச் சமுதாயத்தை அல்லாஹ் - இறைவன் மாற்றுவதேயில்லை.
(அல்குர்ஆன்: 13:11),
இஸ்லாம் ஒரு வாழ்க்கைத் திட்டம்
மனிதன் இன்றைக்கு நிறத்தால், இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால், பிறப்பால், வாழ்கின்ற பகுதியால், தொழிலால், பொருளாதாரத்தால், அரசியல் ஆதாயத்தால், சார்ந்திருக்கும் துறையால், ஜாதியால், குலம் கோத்திரத்தால், வியாதியால் இப்படி எண்ணற்ற காரணங்களால் ஏற்றத்தாழ்வுக்கு ஆளாகிக் கிடக்கின்றான்.
இத்தனை பிரிவினைகளுக்கும் அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவான ஆரோக்கியமான செயல்படுத்துவதற்குச் சாத்தியமான பூர்வமான எல்லா காலத்திற்கும் ஏதுவான அறிவுப் எல்லா நிலப்பரப்புக்கும் தோதுவான ஒரு வாழ்க்கைத் திட்டம் அமைந்தால் அது மனிதகுலத்தின் உய்வுக்கும் உயர்வுக்கும் மட்டுமல்ல அதன் சாந்திக்கும் சமாதானத்திற்கும் காரணமாக நிச்சயம் அமையும்.
இன்றைய சூழலில் பொருளாதார பரிவர்த்தனை, எழுதுபொருட்கள், தொலை-தகவல் தொடர்பு - போக்குவரத்து - விஞ்ஞான ஆற்றல்கள் எல்லாம் போதுமான அளவுக்கு முன்னேறிவிட்டன ஆனாலும் வளரும் நாடுகள் முதல் வளர்ந்துவிட் வல்லரசு நாடுகள்வரை அங்கிங்கெனாதபடி எங்கு "எங்கே நிம்மதி?" என்று ஏங்கும் நிலையை பார்க்கின்றோம்.
மனிதனின் அன்றாடத் தேவைக்கப்பால்
ஆன்மீகத் தேவையும் ஒன்றுண்டு. இரண்டில் எந்த
ஒன்று நிறைவேற்றப்படாமல் போனாலும் மனிதனின்
பாடு திண்டாட்டம்தான். இந்த உண்மை மானசீகமாக
எல்லோராலும் உணரப்பட்டு வருகின்றது. அது
வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஆன்மீகம் அவசியம்
என்று உணர்ந்தவர்கள் (STRESS) மன உளைச்சலுக்கு
ஆளாகி ஆன்மீகத்தின் அரிச்சுவடிகளை அறியாமல்
அவசர அவசரமாக அனாச்சாரமான முடிவுகளை
மேற்கொள்கின்றனர்.
மனித இயல்புகளான,
உள்ளுணர்வுகளான பாசங்களையும் ஆபாசங்களை
யும் இழந்துவிட்டால்
என ஒதுக்கிவிட்டால்
அவற்றைச் சிற்றின்பங்கள்
மனித
சஞ்சாரமற்ற
பகுதிகளில் ஒதுங்கிவிட்டால் ஆன்மீக விருட்சத்தின்
அசகாய நிழலில் ஆழ்ந்து உறங்கலாம் என்று
அநியாயமாய் ஆசைப்படுகிறார்கள். அந்தச்
சிற்றின்பங்களே பேரின்பங்களுக்கு நம்மை ஏற்றிச்
செல்லும் வாகனங்கள் என்பதை இவர்கள்
அறிகின்றார்களில்லை. சுவரில்லாமல் சித்திரம்
வரையத் துடிக்கும் உற்சாக மடையர்கள். பாவம்
இவர்கள் இலவு காத்த கிளிகளாய் ஏமாந்து
போகின்ற அனுதாபத்திற்கு உரியவர்கள். இந்த
இலவு காத்தக் கிளிகளின் பட்டியலில் தலையணைத்
தயாரிக்கும் தந்திரம் தெரிந்தவர்களும் உண்டு.
அவர்கள்தாம்
தங்களது
ஏமாற்றத்தை ஈடுகட்டுவதற்காகப் பிறரை ஏமாற்றிக் குளிர்காயும் SADIST-கள்; ஆன்மீகம் என்ற பெயரில் பெண் மோகத்தை அரங்கேற்றி ஆன்மீகத்தையே அசிங்கப் படுத்தியவர்கள். சாமியார் என்றதும் சராசரி சமூகமே தலைதெறிக்க ஓடுவதற்கு அதுதானே காரணம்!
இந்நிலையில் ஆன்மீக ஞானத்தை அன்றாட வாழ்க்கையுடன் அனாயாசமாய்ப் பிசைந்தூட்டும் அருமைப் பாசறையாய் சராசரி மனிதனுக்கும் ஆளும் அரசனுக்கும் முறையே உரிமையையும் கடமையையும் பக்குவமாய்ப் பகிர்ந்தளிக்கும் அரசியல் சாசனமாகவும் ஆண்டவனின் அங்கீகரிக்கப் பெற்ற ஆனந்த மார்க்கமாகவும் மனித வாழ்க்கையின் நாகரீகத் திட்டமாகவும் விளங்குவது இஸ்லாமிய மார்க்கம். இனி அதன் தனித்துவங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
Comments
Post a Comment