ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

 


ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!


ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! -இவ்வாறு சொன்னவர் திருமூலர். அவர் சார்ந்திருந்த மதம் கூட இதைக் கொள்கையாகக் கொள்ளவில்லை. ஆனால் இஸ்லாத்தில் பேணப்படுகின்றது. இக்கோட்பாடு அடிப்படையாகப்


மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் இஸ்லாம் உங்கள் பார்வைக்கு! 


ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களா கவும் ஆக்கினோம். (அல்குர்ஆன்: 49:13)


நாம் அனைவரும் ஒரு தாய் பெற்ற மக்கள் என்று குர்ஆன் கூறுகின்றது. குலம் கோத்திரம் என்று பிரிந்ததெல்லாம் பின்னாளில்தான் என்றும் அதுவும் மனிதர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக இறைவனே உருவாக்கித் தந்த வசதிகள்தாம் என்றும் இந்த இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது.


முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் 'எந்தச் சிவப்பருக்கும் கருப்பரை விடச் சிறப்பு கிடையாது. எந்த அரபியரும் அரபியல்லாதவரை விடச் சிறந்தவரல்லர்' (நூல்: அஹ்மத்) என்று கூறி நிற மொழி பேதங்களை ஒழித்திருக்கிறார்கள்.


எனவே இது வெறும் தத்துவார்த்தமாக மட்டுமல்லாமல் நடைமுறையிலும் பேணப்பட்டு வருகின்றது. இனி, ஒருவனே தேவன்!' என்ற கொள்கைக்கு வருவோம். ஓரிறைக் கோட்பாட்டையும் கூட ஆழமாக வலியுறுத்தி அதையே அடிப்படைச் சித்தாந்தமாகப் பிரகடனப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம் ஒன்றே! திரித்துவம், பலதெய்வக் கோட்பாடு என்றெல்லாம் வெளிப்படையாகப் பேசக்கூடிய மதவாதிகளினூடே "எங்களது மதக் கோட்பாடும் ஒரே தேவன் என்பதுதான். ஆனால் பாமரர்கள் புரிந்துகொள்வதற்காக படைத்தல், காத்தல், அழித்தல் என்ற இறையோனின் மூன்று பிரத்யேகத் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள்தான் மூன்று தெய்வங்களாகப் பிரித்துள்ளோம்" என்று சொல்பவர்களும் உண்டு.


ஆனால் இஸ்லாம், படித்தோருக்கும் பாமரர்களுக்குமிடையே கடவுளைக் கூறு போடாமல் எல்லோருக்கும் ஒரே இறைவன் என்ற கோட்பாட்டை ஒளிவுமறைவு இல்லாமல் ஓங்கி ஒலிக்கின்றது. "உங்களது இறைவன் ஒரே இறைவன்தான்!" என்று குர்ஆன் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கூறுகிறது. மேலும் கடவுட்கொள்கை பற்றி அது சுருக்கமாக, முழுமையாகக் கூறுவதைப் பாருங்கள்:


(நபியே!) நீர் கூறும்: அவன் அல்லாஹ் ஒருவன்! அல்லாஹ் தேவையற்றவன் (யாரையும் குழந்தையாகப்) பெற்றெடுக்கவில்லை; (யாருக்கும் குழந்தையாகப் ) பிறக்கவுமில்லை. அவனுக்கு இணையாக யாரும் (எதுவும்) இல்லை. (112-ஆவது அத்தியாயம் ) இன்னும் ஒருபடி மேலே போய் ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியமில்லை என்று குர்ஆன்: இறைவன் இருப்பது வாதிடவும் செய்கின்றது (வானம், பூமி ஆகிய) இவ்விரண்டிலும் அல்லாஹ்வையன்றி வேறு பல இருந்திருந்தால் நிச்சயமாக தெய்வங்கள் இவையிரண்டும்


அழிந்தே போயிருக்கும். (21:22)


அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்தால் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பங்களை நிறைவேற்ற பொறாமைகளும் முயலும்போது போட்டிகளும் ஏற்படும். உதாரணமாக இறைவனின் பிரத்யேகத் தொழில்களான படைத்தல் காத்தல் - அழித்தல் ஆகிய முத்தொழில்களை எடுத்துக் கொள்வோம். மூன்று தொழில்களுக்கும் மூன்று கடவுள்கள் என்றும் கற்பனை செய்து கொள்வோம். காத்துக் கொண்டிருக்கும் கடவுள் ஒரு மனிதனுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கும்போது அழிக்கக்கூடிய கடவுள் அதே மனிதனை அழிக்க வேண்டும் என்று கருதினால்..? இரண்டு கடவுள்களின் இரு வேறான விருப்பங்களுக்கொப்ப அந்த மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கும் அதே நிலையில் எப்படி அழிய இயலும்? அப்படியானால் வாழ்வா சாவா என்ற இரண்டில் ஒன்றுதான் நிகழும். அப்போது இரு கடவுள்களில் ஒருவன் நிச்சயம் தோற்றுப்போவான். தோற்பவன் கடவுளாக இருக்க முடியாது என்பது வெள்ளிடை மலை.


இல்லை, கடவுள்கள் தங்களுக்குள் (ADJUST)விட்டுக்கொடுத்துச் சமாளித்துக் கொள்வார்கள் என்று யாரேனும் கருதினால், தனது சுய விருப்பத்தை நிறைவேற்ற இயலாமல் அடுத்தவனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப் படுபவன் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்? என்ற கேள்வி எழும்.


அத்துடன் கல்லாய், கருவியாய், மண்ணாய், மரமாய், சூரியன்-சந்திரனாய், நெருப்பாய், சமுத்திரமாய், அன்னையாய், பிதாவாய், குருவாய், செய்யும் தொழிலாய் இப்படி கடவுள் எல்லாமுமாய்ப் பரிணாமம் பெறுவதாகக் கருதுகின்றனர் பலர். இயலாமை, இயற்கை நியதி போன்ற பலவீனங்களுக்குக் கட்டுப்பட்டவர்களைக் கடவுளுக்கு இணையாக அல்லது கடவுளாகவே கருதுவதை ஜீரணிக்க இயலவில்லை. எனவேதான் 'நிச்சயமாக இறைவனுக்கு இணையாக - சமமாக யாரையும் எதையும் கருதுவது மாபெரும் அக்கிரமம்' (31:13) என்றும் குர்ஆன் எச்சரிக்கின்றது.


இந்தத் தத்துவார்த்தத்தை தத்ரூபமாக இஸ்லாமியர்களின் வாழ்வில் காணலாம். உலகின் எந்த மூலை முடுக்குகளிலுள்ள முஸ்லிமாக, எந்த மொழி பேசக்கூடியவனாக இருந்தாலும் சரி அவனது இறைவனைப் பற்றி அவனிடம் கேட்டால் அவன் 'அல்லாஹ்!' என்ற ஒரே இறைவனையே பதிலாகக் கூறுவான். இது நிதர்சனமான உண்மை.


மேலும் இஸ்லாத்தில் இறைவனுக்குக் குறிப்பிட்ட உருவம் கற்பனை செய்யப்படுவதில்லை. அவன் அவனது தனித் தகுதிக்கேற்ற வடிவத்தில் அமைந்திருக்கிறானேயன்றி அவன் அனுமானத்திற்குட்பட்டவனல்லன். நம்முடைய


பல்வேறு உருவங்கள் கற்பிக்கப்படுகின்ற போது அதனால் ஏற்படும் தவறான விளைவுகளைச் சிலர் கருத்தில் கொள்கிறார்க ளில்லை. கடவுளின் கரங்களில் வில்-அம்பு, வாள் - கேடயம், கத்தி- அரிவாள், ஈட்டி-சூலாயுதம், பயங்கரமான கோரைப் பற்கள் எனப் பல ஆயுதங்களோடு கடவுளர்களைக் கற்பனை செய்பவர்கள் இவ்வாயுதங்களின் பயன்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்பதை அறியத் தவறி விடுகின்றனர். கடவுளை இரண்டுக்கும் மேற்பட்ட கைகளோடு கற்பனை செய்பவர்களும் உண்டு. ஒரு கடவுளுக்கு பத்து கைகள் உண்டெனக் கருதினால் அந்தக் கடவுளால் ஐந்து சராசரி மனிதனின் ஆற்றலை மட்டுமே பிரயோகிக்க இயலும் என்றுதானே அர்த்தம்?


இவ்வாறு கடவுளின் ஆற்றலை வரையறுப்பது இறையிலக்கணத்திற்கு முரணல்லவா?


எனவே கடவுள் இருப்பது எப்படி உண்மையோ அப்படியே அவனுக்கு இருப்பதென்பதும் உண்மை. ஆனால் உருவம் அவனது ஆற்றல் எவ்வாறு வரையறைக்கு அப்பாற்பட்டதோ அவ்வாறே அவனை உருவகப்படுத்துவதும் கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பதே இஸ்லாத்தின் தெளிவான கண்ணோட்டம்.


முஸ்லிம்களிடமும் பல தெய்வக் கோட்பாடு உள்ளதே! நாகூர் ஆண்டவர், முஹ்யித்தீன் ஆண்டவர் போன்ற பல ஆண்டவர்களும், ஏர்வாடி, ஆற்றங்கரை, அஜ்மீர், பீமா பள்ளி எனப் பல புனிதத் தலங்களும் இருப்பதாகக் கேள்விப் படுகின்றோமே! இதில் நாங்கள் நட்டி வைத்து வணங்குவதற்கும் நீங்கள் படுக்க வைத்து வணங்குவதற்குமுள்ள வேறுபாட்டைத் தவிர வேறு என்ன வித்தியாசமுள்ளது? என்று நீங்கள் கேட்கலாம். இது நியாயமான சந்தேகம்தான்.


நாகூர், அஜ்மீர், பொட்டல்புதூர், ஏர்வாடி போன்ற பகுதிகளில் சமாதியாகியிருப்பவர்கள் ஆண்டவர்களல்லர்; ஆண்டகைகள். அதாவது பெருந்தகைகள். இறந்துபோன பிரபலமான அக்காலத்து மனிதர்கள். அவர்களை மரியாதை செய்கின்றோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் சற்று வரம்பு மீறி விடுகின்றனர். இது இஸ்லாத்தின் அடிப்படையைப் பற்றிய போதுமான அறிவில்லாமையையே காட்டுகின்றது. காரணம் மனிதன் தெய்வமாகலாம் என்றெல்லாம் இஸ்லாத்தில் எந்தக் கருத்தும் இல்லை. எனவே சமாதி வழிபாட்டிற்கு இஸ்லாத்தில் துளியும் ஆதாரமில்லை.


நமக்குள்ளே: இஸ்லாத்தைப் பிரதிபலிக்க


வேண்டிய முஸ்லிம்களின் தவறான நடவடிக்கைகளைக் கண்டுதான் பிறர் இப்படியெல்லாம் கேட்கின்றனர். இதற்காக முஸ்லிம்கள் வெட்கப்பட வேண்டும். சமாதியில் அடங்கியிருக்கும் முன்னோர்கள் உண்மையில் மார்க்கத்திற்காக உழைத்த மரியாதைக்குரியவர்களாக இருந்தால், (பலருக்கு வரலாறே கிடையாது) அதற்கான சன்மானங்கள் இறைவனிடம் கிடைக்கும் நாம் அவர்களின் பிழை பொறுத்தலுக்காகவும் உயர் அந்தஸ்த்து பெறுவதற்காகவும் அல்லாஹ்விடம் வேண்டும், அவ்வளவுதான். பிரார்த்திக்க


ஏனெனில் மகான்களுக்கெல்லாம் மகானாக நாம் கருதும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களே கூட “எனது மண்ணறையை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிட வேண்டாம்!” என்று கூறியுள்ளார்கள். எனவே இந்த கப்ரு சமாதி வணக்கங்களை விட்டொழியுங்கள்! இஸ்லாத்தின் சரியான வடிவத்தை உங்களின் நடவடிக்கைகளால் பிரதிபலியுங்கள்!

Comments