மூன்றாவது
அல்-இஸ்ராஃ வல்-மிஃராஜ் தினத்தை அடிப்படையாகக்கொண்டு விழா கொண்டாடுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவிலிருந்து அக்ஸா பள்ளிவாயல் வரை இரவோடிரவாக இஸ்ராஃ பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்து ஏழு வானங்களுக்கு மேல் உயர்த்தப்பட்டது அவர்களுக்கு அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட பாரிய அற்புதங்களில் ஒன்றாகும். இத்தினத்தை (இஸ்ராஃ - மிஃராஜ்) ஞாபகப்படுத்தும் நோக்கில் சில நாடுகளில் ரஜப் மாதம் 27 ஆம் இரவன்று விழாகொண்டாடுவது பரவிக்காணப்படுகின்றது.
இப்னு தஹிய்யாவைத் தொட்டும்
இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"இஸ்ராஃ பயணம் ரஜப் மாதத்தில் நடைபெற்றது என்று சில கதை கூறுபவர்கள் கூறுகின்றார்கள் என்று கூறப்பட்டது.
அதற்கு அவர்கள் கூறினார்கள் : அது பொய்யாகும் என்றார்கள்."
(தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் - இப்னு ஹஜ்ர் பக்கம் 23)
இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"(இஸ்ராஃ - மிஃராஜ் நிகழ்வு) ரஜப் மாதத்திலோ அல்லது அதன் பத்திலோ அல்லது அதிலே குறிப்பிட்ட ஒரு தினத்திலோ நடைபெற்றது என்பதற்கான எந்தவித அறியப்பட்ட ஆதாரங்களும் இல்லை. மாறாக அது சம்பந்தமாக வரக்கூடியவைகள் வித்தியாசமாக அறிவிப்பாளர்கள் துண்டிக்கப்பட்டதாக இருக்கின்றது.
இவைகளைக்கொண்டு தீர்க்கமான முடிவை எடுக்கமுடியாது.
இன்னும் இஸ்ராஃ இரவு என்று எண்ணிக்கொண்டிருக்கும் இரவில் நின்று வணங்குவதைக்கொண்டோ அல்லது வேறு விடயங்களைக்கொண்டோ அவ்விரவை பிரத்தியேகமாக சிறப்பிப்பது முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்படவில்லை."
(ஸாதுல் மஆத் இப்னுல் கையிம் 1-58.)
நான்காவது
ரஜபில் அறுத்துப்பலியிடுவது (அல்அதீரா)அல்லது (அர்ரஜபிய்யா)
அல்அதீரா : அல்அதீரா என்றால் ரஜப் மாதத்தின் முதல் 10 இல்
சிலைகளுக்காக அறுக்கப்படும் பிராணியைக் குறிப்பிடப்படும். இன்னும் அதன் இரத்தத்தினை தலையில் ஊற்றிக்கொள்ளப்படும். இந்த செயற்பாடுகள் ஜாஹிலிய்யா கால செயற்பாடுகளாகும். அவர்களில் சிலர் ஒரு விடயத்தை வேண்டினால் அந்த வேண்டுதல் நிறைவேற்றப்பட்டால் தனது செம்மறி ஆடுகளில் இப்படி இப்படியாக ரஜபில் அறுப்பேன் என்று நேர்ச்சை வைப்பார்கள்.
நிச்சயமாக இஸ்லாம் இந்த அதீராவை நீக்கிவிட்டது
அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்:
30
"(இனி)தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.
(ஆதாரம்: புஹாரி -5473.)
அல்ஹஸன் அவர்கள் கூறினார்கள்:
"இஸ்லாத்தில் அதீரா இல்லை நிச்சயமாக அதீரா என்பது ஜாஹிலிய்யா காலத்தில் இருந்தது. அவர்களில் ஒருவர் ரஜபில் நோன்பு நோற்று அதன் முதல் பத்தில் அறுத்துப்பலியிடுவார்கள்."
(லதாஇபுல் மஆரிப்இப்னு ரஜப் - பக்கம்: 118)
இப்னு ரஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"ஒரு விஷேட தினத்திலோ அல்லது பெருநாள் தினத்திலோ இணிப்புப்பண்டங்களை சாப்பிடுவதைப் போன்று அருப்புப் பிராணியை ரஜபில்காட்சிப்படுத்துவார்கள் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டது ரஜபை பெருநாள் தினமாக எடுத்துக்கொள்வதை அவர்கள் வெறுத்தார்கள்."
(லதாஇபுல் மஆரிப்இப்னு ரஜப் - பக்கம் : 118)
என்றாலும் மற்ற மாதங்களில் அறுப்பதைப்போன்று இம்மாதத்திலும் பொதுவாக அறுப்பது என்பது தடுக்கப்பட்ட ஒன்றாகாது.
ஐந்தாவது
ரஜபில் உம்ரா
சில மனிதர்கள் ரஜபில் உம்ரா கடமையை நிறைவேற்றுவதில் மிகவும் கரிசணை செலுத்துகின்றார்கள். ஏனெனில்அந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் உம்ராவிற்கு அதிகமான நன்மைகள் கிடைப்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்ற காரணத்தினாலாகும்.
இந்த நிலைபாட்டிற்கு எந்தவித அடிப்படையும் கிடையாது.
ஏனெனில்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜபில் உம்ரா செய்யவில்லை.
2
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தொட்டும் ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
-நபியவர்கள்- ஒருபோதும் ரஜபில் உம்ரா செய்தது கிடையாது."
(ஆதாரம் : புஹாரி -1775)
இப்னுல் அத்தார் அவர்கள் கூறினார்கள்:
"மக்காவாசிகளின் செயற்பாடுகளில் ஒன்றாக அவர்கள் ரஜபில் அதிகமாக உம்ரா செய்யும் வழமையுடையவர்கள் என்ற செய்தி என்னை வந்தடைந்தது. அதனைப் பொருத்தவரை அதற்கு எந்தவித அடிப்படையும் இருப்பதாக நாம் அறியமாட்டேன்."
(முஸாஜலா இல்மிய்யா பைனல் இமாமைனில் ஜெலீலைனி
அல்-இஸ்ஸ(த்தீன் பின் அப்துஸ் ஸலாம் வ இப்னுஸ் ஸலாஹ் பக்கம் : 56)
ஆறாவது
இந்த மாதத்தில் நிகழ்ந்த ஏதேனும் நிகழ்வுகள் உள்ளனவா?
இப்னு ரஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"ரஜப் மாதத்தில் பாரிய நிகழ்வுகள் நிகழ்ந்தன என்று அறிவிக்கப்படுகின்றன. என்றாலும் அவைகளில் எவையுமே ஆதாரபூர்வமானதல்ல.
இன்னும்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மாதத்தின் முதல் தினத்தில் பிறந்தார்கள் என்றும் இதன் 27 ஆவது தினத்திலே அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்தது என்றும் கூறப்படுகின்றாது (சில இடங்களில்) 25 ஆவது தினம் என்றும் கூறப்படுகின்றது. இவைகளில் எவையும் ஆதாரபூர்வமானதல்ல.”
(லதாஇபுல் மஆரிப் - இப்னு ரஜப் பக்கம் : 121)

Comments
Post a Comment