ரஜப் மாதம் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைப்பாடு எப்படிப்பட்டது?"

 


"ரஜப் மாதம் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைப்பாடு எப்படிப்பட்டது?"



"இஸ்லாத்தின் பெயரால் நிகழக்கூடிய பித்அத் (நூதண) செயற்பாடுகள் எவைகள்?"


என்பதை விளங்கி நபியவர்களின் வழிகாட்டுதலில் அடிப்படையில் எம் வாழ்வை அமைத்துக்கொள்ள வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக!




அல்லாஹுத்தஆலா சில நாட்களையும் இரவுகளையும் மாதங்களையும்


சிலதை விட இன்னும் சிலதை சிறப்பித்து வைத்துள்ளான்.


இவைகள் அவனின் பாரிய ஞானத்தின் அடிப்படையிலாகும்.


அந்த அடிப்படையில் மாதங்களுக்கு மத்தியில் சிறப்பு மிக்க மாதங்களாக 04 மாதங்களை அல்லாஹுத்தஆலா தெரிவு செய்துள்ளான்.


இதனை அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகிறான் :


வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்கு) 12 மாதங்களாகும். அவற்றில் 04 மாதங்கள் புனிதமானவையாகும்.


(இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுதவற்குரிய) அதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவேஅவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.


(அத்தவ்பா : 36)


எனவே துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய 04 மாதங்களும் புனிதமிக்க மாதங்களாகும். அவைகளில் நான்காவது புனிதமிக்க மாதமாக ரஜப் மாதம் இருக்கின்றது. அந்த மாதம் இஸ்லாமிய வருட அடிப்படையில் 07 ஆவது மாதமாக கருதப்படுகிறது.


அபீ பக்ரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜின்போது பிரசங்கம் நிகழ்த்தினார்கள்அவர்களின் பிரசங்கத்தில் கூறினார்கள், அல்லாஹுத்தஆலா வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானிக்கும் ஷஃபானுக்கும் இடையிலுள்ள முழர் குலத்து "ரஜப்" மாதமாகும்.


(புகாரி 4662 )



இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:


"புனிதமிக்க மாதங்களாக 04 மாதங்கள் உள்ளன.


அவைகளில் 03 மாதங்கள் தொடர்ந்து வரக்கூடிய அடுத்த அடுத்த மாதங்களாகும். அவைகளில் ஒன்று மாத்திரம் தனித்துவரக்கூடிய மாதமாக உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளை நிறைவேற்றுவதற்காக ஹஜ்ஜுடைய மாதத்திற்கு முன்னரான துல்கஃதா மாதம் புனிதமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் துல்கஃதா மாதத்தில் போராடுவதை விட்டும் தவிர்ந்துகொள்வார்கள்.


இன்னும் துல்ஹஜ் மாதத்தில் ஹஜ்ஜடைய கிரியைகளில் ஈடுபடுவார்கள்.


மேலும் அதன்பிறகு வரக்கூடிய மாதமான முஹர்ரம் மாதம் புனிதமாக்கப்பட்டுள்ளது.


ஏனெனில்அந்த மாதத்தில் ஹஜ்ஜிற்காக உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்த மனிதர்கள் தங்களுடைய நாடுகளுக்கு பாதுகாப்பாக திரும்பவேண்டும் என்ற அடிப்படையிலாகும்.


இன்னும் வருடத்தின் நடுப்பகுதியல் வரக்கூடிய ரஜப் மாதத்தில் கஃபாவை தரிசிப்பதற்கும் அங்கே உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கும் அரபியதீப கற்பத்தின் தூரபகுதியிலிருந்து வரக்கூடியவர்கள் வந்து தரிசித்துவிட்டுபாதுகாப்பாக தங்களுடைய நாடுகளுக்கு திரும்பவேண்டும் என்ற அடிப்படையிலும் ரஜப் மாதம் புனிதமாக்கப்பட்டுள்ளது.

(தப்ஸீர் இப்னு கஸீர் 4-148 )


இன்னும் சில அறிஞர்கள் கூறுகின்றார்கள்,


ரஜப் மாதத்தில் நிகழக்கூடிய பாவங்கள் பாரிய விடயமாக கருதப்படும். ஏனெனில்அது புனிதமிக்க மாதங்களில் ஒன்றாக உள்ளது.


அதேபோன்று இந்த மாதத்தில் மனிதனால் நிகழக்கூடிய அநியாயங்கழும் பாரிய விடயமாகவே கருதப்படும். அதனை மனிதன் தனக்குத்தானே செய்துகொண்ட அநியாயமாகவும் இருக்கலாம் அல்லது பிறருக்கு செய்த அநியாயமாகவும் இருக்கலாம்.


இதனை அல்லாஹுத்தஆலா இப்படியாக குறிப்பிடுகின்றான்:


"வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்கு) 12 மாதங்களாகும். அவற்றில் 04 மாதங்கள் புனிதமானவையாகும்.


(இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுதவற்குரிய) அதுதான் நேரான மார்க்கமாகும்.


ஆகவே அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்."


(அத்தவ்பா :36 )


இதில் நாடவருவது புனிதமிக்க 04 மாதங்களில்ல மாறாக 12 மாதங்களாவும் இருக்கலாம்.


அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மானம் அஸ்ஸஃதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது தப்ஸீரிலே அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்." என்ற வசனத்தை குறிப்பிடுகின்றபோது : இதில் வரக்கூடிய கூட்டுப்பெயர் 12 மாதங்களை சுட்டிக்காட்டக்கூடியதாக இருக்க வாய்ப்பு உள்ளது ஏனெனில்அவனை கட்டுப்படுவதின் மூலம் வாழ்க்கையை கொண்டு செல்லவும் அவைகளை (12 மாதங்களை)க் கொண்டு அவனுக்கு வழங்கிய அருளுக்கு நன்றிசெலுத்தும் பொருட்டும் இன்னும் அதிலே அடியார்களின் நலன்களுக்கு தீர்வுகொடுப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட காலமாக அந்த 12 மாதங்களையும்


தனது அடியார்களுக்கு ஆக்கியதாக அல்லாஹுத்தஆலா தெளிவுபடுத்துகின்றான். எனவே அதிலே நீங்கள் உங்களுக்கு அநீதமிழைத்துக் கொள்வதை தவிர்ந்து கொள்ளுங்கள்.


இன்னும் இதில் வரக்கூடிய சுட்டுப்பெயர் புனிதமிக்க 04 மாதங்களையும் சுட்டிக்காட்டக்கூடியதாகவும் இருக்க சந்தர்ப்பம் உள்ளது. ஏனெனில் பொதுவாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் அநீதி இழைப்பது என்பது தடுக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கின்றது.


அதிலும் இந்த 04 மாதங்களில் அநீதி இழைப்பது என்பது குறிப்பாக தடுக்கப்பட்டதாக உள்ளதுடன் அனுமதிக்கப்படாத ஒன்றாகவும் காணப்படுகின்றது. எனவேஇந்த 04 மாதங்களில் அநீதி இழைப்பது என்பது மற்ற மாதங்களில் அநீதி இழைப்பதை விட மிகவும் பாரதூரமான விடயமாகும்.


"ரஜப்" என்று பெயர் சூட்டப்படுவதற்கான காரணம்


ரஜப் என்றால் "கண்ணியப்படுத்தப்பட்டது" என்ற கருத்தைத்தரும். ஏனெனில் ஜாஹிலிய்யா காலத்தில கூட இந்த மாதத்தை கண்ணியப்படுத்தினார்கள். இதிலே போரிடுவதை ஆகுமாக்கிக்கொள்ளவில்லை.


ரஜப் மாதத்தை "முழர் கோத்திரத்து" ரஜப் என்றும் "காதுகேலாத ரஜப்" என்றும் கூறக் காரணம்:


முழர் கோத்திரத்துடன் இணைக்கப்பட்டதற்கான காரணம்: ஏனெனில் அந்த கோத்திரம் இந்த மாதத்ததை அதிகமாக கண்ணியப்படுத்துவதுடன் புனிதப்படுத்தியது.


ஆதலால்தான் இந்த ரஜப் மாதம் அந்த முழர் கோத்திரத்துடன் ஒன்றினைத்து கூறப்பட்டது.


இப்னு கஸீர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:


12/26


ஜுமாதஸ்ஸானிக்கும் ஷஃபானுக்கும் இடையிலுள்ள முழர் குலத்து "ரஜப் மாதம்" என்ற வார்த்தையை விளக்குகின்றபோது, "அது முழர் கோத்திரத்துடன் இணைக்கப்பட்டது ஏனென்றால் அது தான் ஜுமாதுஸ்ஸானிக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் உள்ள மாதம் என்பதை தெளிவுபடுத்துவதற்காகவேயாகும். மாறாக ரபீஆ கோத்திரம் நினைப்பதைப்போன்று புனிதமிக்க ரஜப் என்பது ஷஃபானுக்கும் ஷவ்வாலுக்கும் மத்தியில் வரக்கூடியதல்ல. அவைகளுக்கு மத்தியில் வரக்கூடியது இன்றைய ரமழான் மாதமாகும். எனவே அதனை தெளிவுபடுத்தும் நோக்கத்திலேயே "அது ரபீஆ கோத்திரத்து ரஜபில்லை மாறாக அது முழர் கோத்திரத்து ரஜபாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்.


(தப்ஸீர் இப்னு கஸீர் 03-148)

Comments