குற்றவியல் சட்டங்கள்

 


குற்றவியல் சட்டங்கள்


திருடினால் கையை வெட்ட வேண்டும் திருமணமானவர் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்ல வேண்டும், திருமணமாகாதவர் விபச்சாரம் செய்தால் நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும், அவதூறுக்கு எண்பது கசையடி கொடுக்க வேண்டும் இவையெல்லாம் குற்றவியல் சட்டங்கள். இன்றைக்கும் சர்ச்சைக்குள்ளாகும் சட்டங்கள் இவைதாம்.


திருடுவது ஒரு பெருங்குற்றமா? பல திருட்டுக்கள் செய்தவர்கள் எப்போதாவது பிடிபடுவதும் தண்டிக்கப்படுவதும் பிறகு விடுவிக்கப் படுவதும் நமது நாட்டில் பெரும்பாலும் நடக்கும் வேடிக்கையான வாடிக்கைகள். இதற்குப் போய் இவ்வளவு பெரிய தண்டனையா? இது காட்டு மிராண்டித்தனம் என்று பலர் அலறுகின்றனர்.


இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். இஸ்லாம் திருடர்களின் கைகளை வெட்டுங்கள்! என்று போகிற போக்கில் அள்ளித் தெளிக்கவிலைலை. மாறாக ஒரு மனிதன் திருடாமலிருப்பதற்குத் தேவையான வழிகளை யெல்லாம் வகைப்படுத்திவிட்டுத் தான் இந்தச் சட்டத்தை அமுல்படுத்தச் சொல்கிறது. வேறு வகையில் சொல்வதாக இருந்தால், உழைக்கும் கரங்களை இஸ்லாம் பாராட்டுகிறது; உதவும் கரங்களை வரவேற்கிறது; உழைக்கவோ உதவவோ இயாலாத நிலையிலுள்ள யாசிக்கும் கரங்களை அனுமதிக்கிறது. பஞ்சம் தலைவிரித்தாடும் போது இந்தத் தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சமயோசித சட்டமும் இங்குக் கவனிக்கத்தக்கது) திருடாமலிருப்பதற்கான தீர்வுகளான இந்த மூன்று வகைகளையும் தாண்டி அடுத்தவனுடைய அனுமதியின்றி அடுத்தவனின் உடமைகளில் கை வைக்கப்படுவதைத் தான் இஸ்லாம் எதிர்க்கிறது; அந்தக் கை இருக்கக் கூடாது என்று சட்டம் விதிக்கிறது; அதை வெட்டச் சொல்கிறது.


இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தால் பல பேருக்குக் கையில்லாமல் போகுமே என்கிற அச்சம் பாமரத்தனமானது. ஏனெனில் பலபேர் முன்னிலையில் ஒரேயொரு திருடனின் கை வெட்டப்(பட்டு அதுவும் இன்றைய காலகட்டத்தில் ஒளி-ஒலி படுமானால் நாட்டிலுள்ள பரப்பப்) எந்த மனிதனுக்காவது திருடுவதற்குத் தைரியம் வருமா?


இந்தக் (CRIMINAL) குற்றவியல் சட்டங்கள் முறையாக ஒன்றிரண்டு போதும் நிறைவேற்றப்பட்டாலும் (CIVIL) உரிமையியல் வழக்குகளுக்கு வேலையே இருக்காது. ஆமாம், 'நிதி' மன்றங்கள் சீர்படுத்தப்பட்டால் நீதி மன்றங்களின் வேலை(ள)ப் பளு வெகுவாகக் குறையும். இனி விபச்சாரச் சட்டத்திற்கு வருவோம்.


உயிரினங்கள் அத்தனையிலும் இருபால்கள் உள்ளன. இரு பாலரும் தத்தம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுதல் என்பது தவிர்க்க இயலாத இயல்பு. அதன் வெளிப்பாடாகத்தான், ஒரே மனிதத் தம்பதிக்குப் பிறந்த மக்கள், இன்றைக்குப் பல குலங்களாக, கோத்திரங்களாக பல்கிப் பெருகியுள்ளனர். ஆண்- பெண் காம இச்சையை, பாலுணர்வு வேட்கையைத் தணித்துக் கொள்ள இஸ்லாம் திருமணத்தை அனுமதிக்கின்றது. இல்லையில்லை அதை வலியுறுத்தவே செய்கின்றது. ஓர் ஆண், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை, அதிக பட்சமாக நான்கு பெண்களை ஏகக் காலத்தில் மணமுடித்துக் கொள்ளலாம்; தம்பதியரிடையே சில உரிமைகளும் கடமைகளும் உள்ளன என்றெல்லாம் பல வரையறைகளை இஸ்லாம் விதிக்கிறது. அதன் மூலம் பாலுணர்வுக்கு வடிகாலை ஏற்படுத்துவதுடன் அதன் பெயரால் நடக்கும் காமக் களியாட்டங்களைத் தவிர்க்கிறது.


ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தத்துவமெல்லாம் மேடை அதிர, வாய் கிழியப் பேசி போதுமான அளவுக்குப் புளித்துப்போய்விட்டது. புராணங்களிலும் சரி (தசரத மன்னனுக்கு அவர்தாம் ராமனின் தந்தை அறுபதாயிரம் மனைவிகள், முருகனுக்கு - வள்ளி, தெய்வானை என்று இருவர்) புழக்கத்திலும் சரி (இன்றைய அரசியல் வாதிகள்) இந்தத் தத்துவம் காலம் கடந்து விட்டது. அதில் கொடுமை என்னவெனில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளிடம்(?) கொஞ்சி மகிழும் இவர்கள் சட்டப்படி அந்த மனைவிகளுக்கோ அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கோ சொத்துரிமை கொடுக்காததுதான். இங்குதான் இஸ்லாத்தின் தூர நோக்கு பிரகாசிக்கிறது. அது, அந்த மனைவிகளையும் சட்டப் பூர்வமாக அங்கீகரித்து சகல உரிமைகளையும் வழங்குகிறது. இவ்வாறு ஆண்களும் பெண்களும் தங்களின் கற்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சூழ் நிலையையும் வகுத்துத் தருகின்றது இஸ்லாம்.


இதுபோக மக்களின் காம இச்சையைத் தட்டி எழுப்பக்கூடிய அனைத்து வாசல்களையும் இஸ்லாம் முழுமையாக அடைக்கிறது. ஆண்களும் பெண்களும் தங்களின் அந்தரங்கக் கவர்ச்சிகளையோ கண பரிமாணங்களையோ வெளிப்படுத்தும் விதமாக அரை குறை ஆடைகளை அணியக் கூடாது (பெண்களுக்கு அவர்களின் உடற்கூறுகளை அனுசரித்து பிரத்தியேகமான பர்தா முறை), ஆணும் பெண்ணும் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், ஓர் ஆண், அந்நிய பெண்ணுடன் தனித்திருக்கக்கூடாது, ஒரு பெண் தனிமையில் நீண்ட பயணம் மேற்கொள்ளக் கூடாது, ஆண்களும் பெண்களும் கலக்கக்கூடாது, உருவப்படங்கள் வரையக்கூடாது, அசிங்கமான வார்த்தைகளை உதிர்க்கக்கூடாது, காதலின் பெயரால் காம லீலைகளை அரங்கேற்றக் கூடாது, கணவன்- மனைவி தங்களிடையே நடக்கும் அந்தரங்க இரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றெல்லாம் ஆபாசத்தின் அத்தனை கிளைகளையும் முறித்து விடுகிறது இஸ்லாம்.


இது மட்டுமல்லாது வரதட்சணை ஒழிப்பு. விதவைத் திருமணம், பலதாரமணம், திருமணச் சடங்கு - சம்பிரதாயங்களுக்குச் சாவுமணி அடித்தல் ஆகிய திட்டங்களால் இஸ்லாம் திருமணத்தை மிகவும் எளிமைப்படுத்துகிறது. ஏனெனில் எந்தச் சமூகத்தில் திருமணம் சிரமமாகி விடுகின்றதோ அந்தச் சமூகத்தில் விபச்சாரம் பெருகும் என்பது நிரூபணமான உண்மை.


இவ்வாறு ஒரு பக்கம் சராசரி மனிதன் தனது காம வேட்கையைத் தணித்துக்கொள்ள ஏராளமான வடிகால்களை அமைத்துக் கொடுத்துவிட்டு மறுபுறம் அவனது இச்சை கொச்சைப்படுத்தப்படாமலிருக்க தாராளமான அரண்களையும் ஏற்படுத்திய பிறகும் ஒருவன் பிறன்மனை நோக்கினால் அவனை என்ன செய்வது? இப்படிப்பட்ட கயவனால் சமூகத்திற்கு என்ன இலாபம்? இவன் திருமணமாகாதவனாக இருந்தால், அந்தப்புரத்தைச் சுவைக்காதவன் பாவம், திருந்தட்டும்! என்று கருதி நூறு கசையடிகளுடன் விட்டுவிடலாம். திருமணமான பிறகும் பதி தாண்டுபவளையோ அல்லது படி தாண்டுபவனையோ விட்டுவைக்கலாமா? அவ்வாறு விட்டுவைக்கப் போய்த்தானே கற்பழிப்புக் குற்றங்கள் நாளுக்கு நாள் மலிவதும் வேலியே பயிரை மேயும் அவலங்கள் நிகழ்வதும் ஆன்மீக ஆசிரமங்கள் அந்தப்புரங்களாக மாறும் அக்கிரமங்கள் தொடர்வதும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. அப்படியானால் அவன் கல்லால் எறிந்து கொல்லப் படுவதில் என்ன அநியாயம் வேண்டிக் கிடக்கின்றது? என்னதான் இருந்தாலும் ஓர் உயிரைக் கொல்வதா? என்று சிலர் வக்காலத்து வாங்குகின்றனர். இவர்கள், கற்பு சூறையாடப்பட்டு உயிரிருந்தும் நடைப்பிணமாக சுற்றித் திரியும் அபலைப் பெண்களுக்கு என்ன பரிகாரம் கூறுவார்கள்?


கல்லெறிந்து கொல்வது என்கிற உயிரைப் பறிக்கும் இந்தச் சட்டம் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று நிேைவற்றப்படுகின்ற ஒன்றல்ல. இந்தக் குற்றத்தைப் புரிந்தவர் சுயமாகவே நீதி மன்றத்தில் வந்து தம்மை ஒப்புவிக்க வேண்டும். (இது அசாத்தியமான ஒன்றாகத் தோன்றுகிறதல்லவா? குற்றத்தைச் செய்த ஒருவன் அதற்கான தண்டனை கொலைதான் என்று தெரிந்துகொண்டே நீதி மன்றத்தில் அவன் சரணடைவானா? என்று நாம் நினைக்கலாம். அனால் அவ்வாறு சரணடைந்தவர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆயினும் அது சராசரிக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைதான்). அல்லது அவன் குற்றம் புரிவதை நேரில் பார்த்த நான்கு நபர்களின் சாட்சியம் வேண்டும். நான்கு பேரை வைத்துக்கொண்டு யாரேனும் விபச்சாரம் புரிவாரோ? அப்படியானால் இந்தத் தண்டனை நிறைவேற்றப் பெறுவது மிகவும் அரிது என்று விளங்குகிறதல்லவா?

இந்தச் சூழ்நிலையில் இந்தக் குற்றவியல் தண்டனை வெறும் ஏட்டில்தானா? நடைமுறைக்குச் சாத்தியமில்லையா? என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. எவனாவது வேண்டுமென்றே தனக்கு வேண்டாதவன் மீது விபச்சாரக் குற்றத்தைச் சுமத்திவிட்டால் ஓர் உயிரல்லவா பறிக்கப்பட்டுவிடும். எனவேதான் ஒன்றல்ல இரண்டல்ல, நான்கு சாட்சிகள் தேவைப்படுகின்றன. நான்கு பேரும் சேர்ந்து ஒருமித்து பொய் கூறமாட்டார்கள் என்கிற அழுத்தமான நம்பிக்கையும், ஒரு குற்றவாளி தப்பித்தாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிற எதிர்பார்ப்பும்தான் அதற்குக் காரணம்.


இந்த அடிப்படையில்தான் யாரும் வெறுமனே குற்றம் சுமத்தப்பட்டு அவனுடைய கண்ணியத்திற்கும் கவுரவத்திற்கும் இழுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக சாட்சிகளை இஸ்லாம் ஆதாரப் படுத்துகின்றது; அந்த வகையில் சாட்சியம் முறையாக அமையவில்ைலை எனில் சாட்சிகளை அவதூறு குற்றத்திற்கு ஆளாக்கி எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும் சட்டம் பிறப்பித்திருக்கிறது.


ஆக, நாலு பேர் முன்னிலையில் பகிரங்கமாக குற்றம் புரிபவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களால் இந்தச் சமூகம் அடையும் தீமைகள் ஏராளம், அதனால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்கிற இஸ்லாத்தின் தூர நோக்கும் இங்கே வெளிப்படுகின்றது.


எனவே இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவை எனக் கருதுவோருக்கு நான் சொல்வது இதுதான்: காட்டுமிராண்டித்தனமான குற்றங்களைப் புரியும் கயவர்களுக்கு அந்த மாதிரியான தண்டனைகள் தான் பொருத்தம். ஏனெனில் கற்பழிப்புக் குற்றங்கள் அங்கிங்கெணாத படி எங்கும் நிகழ்வதால் இந்தியா உட்பட நாகரிகம் சரிந்து கொண்டிருக்கும் மேலை நாடுகளிலும் உள்ள மாதர் சங்கங்களெல்லாம் கற்பழிப்புக் குற்றங்களுக்குக் கடுமையான சட்டம் வேண்டும் என்று குரலெழுப்ப ஆரம்பித்துவிட்டனர். இந்திய அரசாங்கம் கூட பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று யோசிக்க ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அநேகமாக இந்நூல் வெளியாகும்போது சட்டம் அமுலாக்கப்பட்டு விடலாம். முஸ்லிமல்லாத மற்றவர்களும் இஸ்லாமிய குற்றவியல் FnL சட்டங்களை வரவேற்கின்றனர் என்பதற்கு ஒரு சோற்றுப் பதம்


இதோ :


நீங்கள் இறந்த பிறகு உங்கள் கல்லறையில் என்ன எழுதப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று பிரபல கவிஞர் முத்து கேட்கப்பட்டதற்கு அவரின் பதில்: 


கடவுளின் பெயரைச் சொல்லி கயமைகள் செய்வோர் தம்மைக் கடலிலே அமிழ்த்திக் கொல்லக் காலமும் வருதல் வேண்டும். பொதுப்பணம் தனைச் சுருட்டும் போக்கிரிக் கூட்டம் தன்னைக் கொதிக்கின்ற எண்ணெய் ஊற்றிக் கொல்லவும் சட்டம் வேண்டும். திருடினால் கையை வெட்டும் சிறப்பான நல்லச் சட்டம் அரேபியா போல இங்கும் அவசியம் வேண்டும் வேண்டும். அரசியல் தலைவர், தொண்டர், அதிகாரி தவறு செய்தால் தர்மத்தைக் காப்போர் கூடி சாட்டையால் அடித்தல் வேண்டும். கற்பழிக்கின்ற போலீஸ் கயவர்கள் சிரத்தைக் கொன்று நற்புத்தி புகட்டும் வண்ணம் நட்டுவைத்திடவும் வேண்டும்....


(நன்றி: தினமணி கதிர் 5 பிப்ரவரி 1995)


இது ஒரு தனி மனிதனின் விருப்பம் என்றாலும் சமூக பிரக்ஞையுள்ளவனின் சமுதாயத்தைப் பற்றிய பன்முகப் பார்வையின் வெளிப்பாடு என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எனவே, காட்டுமிராண்டிகளுக்கு வக்காலத்து வாங்குவதை விட்டுவிட்டு கட்டுப்பாடும் கண்ணியமும் காக்கப்படுவதற்காகக் கொடுங்கள்! குரல்


பயிர்களிலுள்ள களைகளை அகற்றுங்கள்; வேலிகள் உஷாராகிக் கொள்ளும். ஒரேயொரு குற்றவாளியைத் தண்டியுங்கள்; அதனால் ஓராயிரம் குற்ற உணர்வு கொண்டவர்கள் திருந்தக் கூடும்.


சட்டத்தால் பாதிக்கப்படுபவனின் நிலையை விட அவனது குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களின் ‎‫

நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்! அப்போதுதான் இஸ்லாத்தின் தெளிவான தூர நோக்கு புரியும்.

Comments